கேரளாவில் தென்மேற்கு பருவமழை; தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது  தமிழகம்.இருக்கிற நீர் ஆதாரங்களை அழித்தும் மரங்களை வெட்டியும் பொறுப்பற்ற முறையில் தமிழகம் நடந்து கொண்டால் எப்படி மழை பெய்யும்?

அரசே ஏரி,குளங்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டிடங்களை கட்டும் போது சாதாரண மனிதனுக்கும் சட்டத்தை மீறலாம் என்கிற மன நிலையை உருவாக்கி விட்டது

மழை இன்றி வாடும் தமிழகம் குடிதண்ணீருக்கு இந்த ஆண்டு மிகப்பெரிய இடர்பாடுகளை சந்தித்தது.தற்போது தமிழகம் பருவ மழையை எதிர்நோக்கி காத்துக்கொண்டு இருக்கிறது

இன் நிலையில், தென்மேற்கு பருவமழை நாளை கேரளாவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மனத்திற்கு இதமாக இருக்கிறது

கேரளாவில் தென்மேற்கு பருவமழை பெய்ய ஆரம்பித்தால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளிலும் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு உருவாகி வரும்.  தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திலும் ஓர் அளவு மழை பொழிவு கிடைக்கும். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் போதுமான அளவு பெய்யாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதை எதிர்பார்த்து விவசாயிகளும், பொது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.


வழக்கமாக கேரளாவில் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் மாதம் 5-ந்தேதிக்குள் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தென்மேற்கு பருவமழை நாளை (8-ந்தேதி) கேரளாவில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதிகளிலும் நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top