20 லட்சம் கோடி ரூபாய் சீன பொருட்கள் மீது வரி – அமெரிக்கா அதிபர் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீன பொருட்கள் மீது மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.

சீனா – அமெரிக்கா இடையே வர்த்தக போர் உச்சத்தை அடைந்துள்ளது. இரு நாடுகளும் ஒரு நாட்டின் பொருட்கள் மீது மற்றொரு நாடு வரி விதிப்பை அதிகப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:-

சீனாவுடனான பேச்சுவார்த்தையில் பல ருசிகர சம்பவங்கள் நடந்துள்ளது, என்ன தான் நடக்கிறது என பார்க்கலாம்.

சீன பொருட்களுக்கு மேலும் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வரி விதிப்பது குறித்து யோசித்து வருகிறோம். இதை சரியான தருணத்தில் அமல்படுத்த உள்ளோம் என்றார்.  ஆனால் எந்த பொருட்கள் மீது வரி விதிக்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top