சிங்கள புத்த மடாதிபதி போராட்டம்; இலங்கையில் இரு முஸ்லிம் கவர்னர்கள் ராஜினாமா

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று  தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின் மீது தாக்குதலுக்கு பின்னர் புத்த மதத்தினர் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தவும், அவர்களை வைத்து அரசியல் செய்யவும் ஆரம்பித்துவிட்டனர்

அதன் தொடர்ச்சியாக இரு மாகாணங்களை சேர்ந்த முஸ்லிம் கவர்னர்கள் இன்று ராஜினாமா செய்தனர.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த பிப்ரவரி மாதம்  ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல ஓட்டல்களின்மீது தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் 258 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையை சிங்கள பௌத்த அரசியல்வாதிகள்  அதிகரிக்க வைத்துள்ளனர்.  

இலங்கை அரசியலில் முஸ்லிம்களுக்கு எதிரான அரசியலை முன் எடுக்க சிங்கள பௌத்த பிக்குகள் சிங்கள அரசுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.  மேற்கு மாகாண கவர்னர் ஆஸாத் சாலே மற்றும் கிழக்கு மாகாண கவர்னர் ஹிஸ்புல்லா ஆகியோர் மீதும் குண்டு வெடிப்புக்கு தொடர்பு இருப்பதாக புரளியை கிளப்பி விட்டு  குற்றம்சாட்டப்பட்டது. இதை இவர்கள் இருவருமே மறுத்து வந்தனர். ஆனால், இவர்களின் மறுப்பு அறிக்கைகளை புத்த மதத்தலைவர்கள் ஏற்கவில்லை. 

இவர்கள் இருவரும் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதானா கண்டி நகரில் உண்ணாவிரதம் மேற்கொண்டார். 

இந்த இரு முஸ்லிம் கவர்னர்களையும் அதிபர் பதவிநீக்கம் செய்ய வேண்டும். அதுவரை எனது உண்ணாவிரதம் தொடரும் என்று அவர் அறிவித்திருந்தார். 

பிரபல புத்த மதத்தலைவர் கலகோடாத்தே ஞானசாரா, கொழும்பு கத்தோலிக்க தேவாலயத்தின் தலைவர் கர்டினல் மால்கோம் ரஞ்சித் ஆகியோர் அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாண கவர்னர்களாக பதவி வகிக்கும் இவர்கள் இருவரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கண்டி நகரில் இன்று புத்த மதத்தினர் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 10 ஆயிரம் பேர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக சிலர் ஆவேசத்துடன் கோஷமிட்டனர். 

இதன்விளைவாக, மேற்கு மாகாண கவர்னர் ஆஸாத் சாலே மற்றூம் கிழக்கு மாகாண கவர்னர் ஹிஸ்புல்லா ஆகியோர் இன்று இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனாவை சந்தித்து தங்களது ராஜினாமா கடிதங்களை ஒப்படைத்தனர்.

தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்து, தமிழீழ மக்களை இனப்படுகொலை செய்து தமிழர் நிலங்களை ஆக்கிரம்பித்து இருப்பது போன்று இப்போது முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சாரத்தை எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.இனி தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து போராடினால்தான் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று முஸ்லிம் தலைவர் ஒருவர் கூறிவுள்ளது நினைவு  கூறத்தக்கது.  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top