பிரதமர் பதவி ஏற்பதற்கு முன்பே மோடி செல்லும் வெளிநாட்டு பயண பிளான் ரெடி

இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றி அமைக்க இருந்த இந்த தேர்தல்  7 கட்டங்களாக நடந்து, முடிந்து ,முடிவுகளும் வெளியிடப்பட்டது. ஆனால்  மீண்டும் மிருகப் பலத்தோடு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க இருக்கிறது

இதையடுத்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, வரும் 30ம் தேதி பதவி ஏற்பார் என தெரிவிக்கப்பட்டது. 


இந்நிலையில் மோடி வெளிநாடுகள் செல்லும் பயண திட்டங்கள் குறித்து தற்போதே வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் மாதம் 13ம் தேதி கிரிகிஸ்தானில் நடக்கும் ஷங்காய் ஒத்துழைப்பு மாநாடு, மற்றும் ஜூன் 28ம் தேதி ஜப்பானில் நடக்கவுள்ள ஜி 20 மாநாடு ஆகியவற்றில் மோடி கலந்துக் கொள்ளவுள்ளார். 


ஆகஸ்ட் மாதம் – பிரான்ஸ், செப்டம்பர் மாதம் – ரஷ்யா மற்றும் அமெரிக்கா,  நவம்பர் மாதம் – தாய்லாந்து மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் என வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஐந்து ஆண்டில் பிரதமர் மோடி வெறும் 50  நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்திற்கு வந்து சென்றார். அவர் இந்தியாவில் இருப்பது அபூர்வமாகத்தான் இருந்தது.ஒரு தடவைக் கூட பத்திரிக்கைகளுக்கு பேட்டி தந்ததில்லை  ஆனால் ,56 நாடுகளுக்கு பயணம் சென்றார்.

இந்த முறை அவர் இந்தியாவிலே இருந்து நல்ல ஆட்சி தருவார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், ஆட்சி அமைக்கும் முன்பே வெளி நாட்டுப் பயணத்திற்கான அறிக்கையை வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ளது  நாட்டு மக்களுக்கு ஏமாற்றமே!


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top