17 வது பாராளுமன்றத்தின் அதிக உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சி திமுக!


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுக்கான வாக்குகள் நேற்று முழுவதும் எண்ணப்பட்டன.  தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வாக்கு எண்ணிக்கையில் தமிழகத்தின் எதிர்க்கட்சியான திமுக, பெரும்பாலான இடங்களில் முன்னிலையில் இருந்து வந்தது. 

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற 39 தொகுதிகளில், 38 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.


தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் அவரவர் தனி சின்னத்திலும், மதிமுக, ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள், திமுகவின் நிரந்தர சின்னமான ‘உதயசூரியன்’ சின்னத்திலும் போட்டியிட்டனர். 

திமுகவுடனான இந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தமிழகத்தில் மாபெரும் வெற்றி பெற்றது. தேசிய அளவில் பாஜக, ‘தாமரை’ சின்னத்தில் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கிறது. 

இதையடுத்து காங்கிரஸ் ‘கை’ சின்னத்தில் 52 இடங்கள் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக இடம் பிடித்துள்ளது.

மற்ற மாநில கட்சிகளை பின்னுக்கு தள்ளி, தமிழகத்தில் 23 இடங்களில் வெற்றிப்பெற்று  தேசிய அளவில் அதிக மக்களவை தொகுதி உறுப்பினர்களை கொண்ட கட்சிகளின் பட்டியலில் திமுக மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.


திமுகவையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றிப்பெற்று நான்காவது இடத்திலும், ஒய்.ஆர்.எஸ் காங்கிரஸ் போன்ற பிற கட்சிகள் அடுத்தடுத்தும் இடம் பெற்றுள்ளன.  

 கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top