நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகும் தமிழகம்!

மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி 350  இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும்  , தமிழகத்தில் இந்த கூட்டணி ஒரே ஒரு தொகுதி மட்டுமே வென்றுள்ளது. 

தேனி தொகுதியில் மட்டும் அதிமுக வென்றுள்ளது.  நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவான வசந்தகுமார், தற்போது எம்.பி.யாக தேர்வாகி உள்ளதால் விரைவில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார்.தமிழகத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி வசந்தகுமார் வெற்றி பெற்றிருந்தார். 

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில்  வசந்தகுமார் களமிறக்கப்பட்டார் . நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணனை வசந்தகுமார் தோற்கடித்தார். 

எனவே, தற்போது எம்.பியாக தேர்வாகி உள்ளதால் விரைவில் தனது நாங்குநேரி எம்எல்ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்வார். அதனைத்தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனினும், நேற்று எண்ணப்பட்ட இடைத்தேர்தல் முடிவுகளில் அதிமுக 9 இடங்களில் வென்றுள்ளதால், ஆட்சியில் உடனடி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தலாக இது அமையாது. துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏ க்கள் மீதுள்ள வழக்கு நிலுவையில் உள்ளது,அதன் மீதான தீர்ப்பு வருகின்றபோது அது அதிமுக வுக்கு எதிராக இருக்கும் நிலையில் தான் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top