உத்திரபிரதேசம் பாஜக வெற்றி; தேர்தல் ஆணையம்-EVM மீது வலுக்கும் சந்தேகங்கள்!

வெகுஜன மக்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை பொய்த்து போய் விட்டது நாள்தோறும் வாக்குபதிவு  இயந்திரங்கள் இந்தியாவின் எதோ ஒரு மூலையில் கடத்தப்படுவதும் இல்லை மாற்றி வைக்கப்படுவதுமாக இருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் சரியான பதிலை அளிக்கவில்லை

22 எதிர்கட்சிகள் ஒன்று திரண்டு தேசிய தேர்தல் ஆணையத்திடம் வாக்குபதிவு  இயந்திரங்கள் குறித்தான குறைபாடுகளை கூறி நடவடிக்கை எடுக்க சொல்லியும் தேர்தல் ஆணையம் அதை கண்டுகொள்ளவில்லை  

வாக்கு எண்ணிக்கைக்கு இரண்டு நாள்   இருக்கும் சூழ்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள்  உத்திரபிரதேசம்  உள்ளிட்ட பல மாநிலங்களில் சந்தேகப்படும்  வகையில் அங்கும் இங்கும் கொண்டு செல்லப்பட்டன

உத்திர பிரதேசம்  மார்கெட் ஒன்றில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தி வைக்கப்பட்டிருந்தது  பிடிபட்டது. ஆனால் ,தேர்தல் ஆணையம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை

எதிர்கட்சிகளும் பொதுமக்களும் பிடிவாதமாக நடவடிக்கை எடுக்க கேட்டதால் ‘அவை எல்லாம் பயன் படுத்தப்படாத இயந்திரங்கள்’ என்று தேர்தல் ஆணையம் பொய்யை சொல்லி  தப்பித்து விட்டது.

பயன்படத்தப்படாத இயந்திரங்களை இப்போது ஏன் அங்கும் இங்கும் கொண்டு செல்ல வேண்டும்..?

அதுவும் போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எந்த வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொண்டு செல்லக்கூடாது என்ற தேர்தல் ஆணைய உத்தரவை மீறி பாதுகாப்பு இல்லாமல் கொண்டு சொல்லப்படுவது ஏன்..?

தேர்தல் ஆணையத்தில் அந்த விடியோக்களைக் காண்பித்து புகார் அளித்தால், பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக இருப்பதாக கூறிவருகிறது.

பதிவாகாத இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு இடம் மாற்றினால் போதாதா..? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.

யாருக்காக தேர்தல் அதிகாரிகள் இப்படி செயல்படுகிறார்கள் என்ற கேள்வியை மட்டும்  பொதுமக்கள் கேட்டுக்கொண்டே இருந்தார்கள் உத்தரபிரதேசத்தில்தான் அதிகமான வாக்குபதிவு இயந்திரங்கள் வண்டிகளிலும் ,ஜீப் களிலும்,அதிகாரிகளின் வீடுகளிலும்,மார்க்கெட் வீதிகளிலும் கடத்தப்பட்டிருந்தன  

உத்தரபிரதேசத்தில் பாஜக அரசு ஆளும் கட்சியாக இருந்தாலும் அந்த அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மையே இருந்தது

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசம் 80 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இந்த மாநிலத்தில் வெற்றி பெறுபவர்தான் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.ஆனால் பாஜகவுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்ததால் மோடிக்கு இந்த தேர்தலில் உத்தரபிரதேசம் பெரும் சவாலாக இருந்தது

எப்படியாகினும் உத்தரபிரதேசத்தில் வெற்றி பெறவேண்டும் என பல உத்திகளை மோடி –அமித்ஷா கூட்டணி கையாண்டது.காரணம் பகுஜன் சமாஜ் – சமாஜ்வாடி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி மோடி –அமித்ஷா கூட்டணிக்கு வலுவான எதிர்ப்பை காட்டியது

ஒட்டுமொத்த பாஜக தொண்டர்களும் உத்தரபிரதேசம் இந்த முறை நமக்கு வெற்றியை  தராது என்று நினைத்திருந்த போது  காலையில் வாக்கு எண்ணிக்கையில் 53 இடங்களில் பாஜக முன்னிலையில் வந்தது பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.பாஜக தொண்டர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் தான்   


நேரம் செல்லச் செல்ல பாஜக முன்னிலை பெற்ற தொகுதிகள் அதிகரித்தன. மதிய நிலவரப்படி 58 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றிருந்தது. 19 தொகுதிகளில் மெகா கூட்டணி முன்னிலை பெற்றிருந்தது. 

இந்த நிலையில் பாஜகவின் உபி வெற்றி பலரின் சந்தேகத்தை கிளப்பி விட்டிருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் நம்பிக்கையை சந்தேகிக்கவைத்திருக்கிறது.

பல இடங்களிலும் இது போன்ற செயல்பாடுகள் நடந்ததால், தேர்தல் ஆணையம் இதற்கு சரியான விளக்கம் கொடுக்காததால் இந்திய நாட்டின் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top