மக்கள் வெறுப்புக்கு மத்தியில் மேற்கு வங்காளத்தில் பாஜக எப்படி 18 தொகுதியில் முன்னிலையில் வந்தது!

மேற்கு வங்காளத்தில் பாஜக 18 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக வுக்கு கடுமையான எதிர்ப்பு மக்கள் மத்தியில் இருந்தாலும் அதன் வளர்ச்சி பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது மம்தா பானர்ஜி கடந்த தேர்தலை விட சற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியதுபோல் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது.

மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் பா.ஜனதா தலைவர்களான அமித் ஷா, பிரதமர் மோடிக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடைபெற்றன.கடந்த முறை 2 இடங்கள் மட்டுமே பிடித்திருந்த பா.ஜனதா இரட்டை இலக்க இடங்களை பிடிக்க தீவிரம் காட்டியது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கடும் சவாலாக விளங்கியது.42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை 34 இடங்கள் பிடித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top