ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை; பாஜக பின்னடைவு

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

17-வது பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதற்கட்ட சுற்றுகளின் முடிவு அடிப்படையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 343 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஜம்மு காஷ்மீரை பொறுத்தவரை, தேசிய மாநாட்டு கட்சி 3 தொகுதிகளில்  முன்னிலை பெற்றுள்ளது. அக்கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா ஸ்ரீநகர் தொகுதியில் முன்னிலை வகிக்கிறார். பாரமுல்லா, அனந்தநாக் ஆகிய தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி முன்னிலை வகிக்கிறது. உதாம்பூர் மற்றும் ஜம்மு ஆகிய இடங்களில் மட்டுமே பாஜக முன்னிலை வகிக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top