மம்தா அதிரடி! மத கலவரம் ஏற்படும் என அமித்ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு மே.வங்க அரசு தடை

மேற்கு வங்காளத்தில் அமித்ஷாவின் பொதுக்கூட்டத்துக்கு அம்மாநில அரசு தடை விதித்தும் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பாஜக ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களில் பாஜக அரசு தன்னுடைய அதிகாரத்தைக்கொண்டு அந்தந்த மாநிலங்களின் உரிமையை பறிப்பதும் அல்லது மாநில கட்சியை தனக்கு சேவகம் செய்யும் கட்சியாக மாற்றவும் செய்துகொண்டிருப்பது நாடறிந்த விஷயம்.அப்படி உரிமைகள் பறிக்கப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு இருப்பதும், பாஜக வின் அடிபொடி தொண்டன் போல அதிமுக பணிவதும் அன்றாட செய்தியாக இருக்கும் இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் மாநில அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அந்த மாநில மக்களை தலை நிமிர வைத்திருக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் ஆறு கட்டங்களாக முடிந்த நிலையில், 7-வது கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது.  தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் பட்டையை கிளப்பி வருகிறது. இது பாஜக தொண்டர்களிடையே கடுமையான பொறாமை உணர்வை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் பேசும் போது தான் என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே ஒரு பிரதமர் போன்று பேசாமல் பதற்றத்துடன் பேசுகிறார்.மேற்கு வங்காளத்தின்  மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி மக்களிடையே கடந்த ஐந்து வருட மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எடுத்து அலசி ,ஆராய்ந்து பேசுகிறார்.

இது பாஜக காரர்களுக்கு பிரச்சனையாகிறது. பாஜக தொண்டர்கள் மக்களிடையே மதம் குறித்து மட்டும் பேசுகிறார்கள்  மம்தா பானர்ஜியை தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான  பொதுக்கூட்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்க போலீசார் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை இது ஏற்படுத்தியுள்ளது. 

மதம் குறித்து பேசி மக்களிடையே கலவரத்தை ஏற்படுத்த பாஜக நினைக்கிறது என்று பொதுக்கூட்டத்தை ரத்து செய்து விட்டது மம்தா அரசு

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்ததை கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top