மேற்குலகின் அறியுறுத்தலில் இஸ்லாமிய போதகர்களை வெளியேற்றும் இலங்கை

கொழும்புவில் ஈஸ்டர் தினத்தன்று கிருத்துவ பேராலாயத்தில் குண்டு வெடித்து 253 உயிர்களை கொன்ற பாதக செயலின் காரணமாக சாதாரண இஸ்லாமியர்களையும் இலங்கை அரசு தீவிரவாதிகள் போல் நடத்த ஆரம்பித்து இருக்கிறது.இதற்கு மேற்கு உலகமும் இந்தியா ,சீனா போன்ற நாடுகளும்  உதவியாக இருப்பது இலங்கையில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் பாதுகாப்பற்ற தன்மையை உணரும் நிலைக்கு தள்ளப்பட்டுயிருக்கிறார்கள்   

விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

253 உயிர்களை பறித்த பயங்கரவாத தாக்குதல்களையடுத்து  ஜாகீர் நாயக்கின் ‘பீஸ் டி.வி.’ ஒளிபரப்பை இலங்கையில் உள்ள இரு பிரதான கேபிள் ஆபரேட்டர்கள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இதற்கிடையில், சுற்றுலா விசா மூலம் இலங்கைக்குள் நுழைந்து இங்குள்ள இஸ்லாமிய மதரசாக்களில் போதகர்களாக இருக்கும் சுமார் 800 வெளிநாட்டினரை உடனடியாக நாடுகடத்த வேண்டும் என பெருநகர மற்றும் மேற்கத்திய மேம்பாட்டுத்துறை மந்திரி பாட்டாலி சம்பிக்க ரனவக்க இலங்கை அரசை வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை மந்திரி வஜிர அபேவர்தென தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பல பகுதிகளில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து மத போதகர்களை இங்கு வரவழைப்பது காலகாலமாக உள்ள வாடிக்கையான செயல்தான். ஆனால், சமீபகாலமாக இந்த போதகர்களின் வருகை அதிகரித்து இருந்தது. அவர்களுடன் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

எனினும், ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பிறகு நாடு முழுவதும் குடியுரிமைத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் வங்காளதேசம், இந்தியா, மாலத்தீவு, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்துவந்து விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கியிருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 பேர் சமீபத்தில் நாடு கடத்தப்பட்டனர் என வஜிர அபேவர்தென குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் இஸ்லாமிய போதகர்களுக்கான விசா கட்டுப்பாடு  நடைமுறைகளை சற்று கடினமாக்கவும் அரசு தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் ஈஸ்டர் தாக்குதல்களுக்கு பெரும் வருத்தத்தை தெரிவித்ததோடு அந்த பாதக செயலை செய்தவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம்,இஸ்லாம் தீவிரவாதத்திற்கு எதிரானது என்று சொல்லி சாதாரண மக்களோடும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியும் செய்து மனிதாபிமானத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தினார்கள்.

இதை எல்லாம் சட்டைச் செய்யாத சிங்கள பௌத்த மதவாத இலங்கை அரசு  மேற்குலகின் ஒப்புதலுக்கு இணங்கி இஸ்லாமியர்களை வெளியேற்றுகிறது.இந்த நடவடிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது என மக்களாட்சியை , மனித உரிமையை ஆதரிக்கும் நாடுகள்  கண்டித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top