மோடி-அமித்ஷா வுக்கு கைகட்டி வேலை செய்கிறது தேர்தல் ஆணையம் -சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு

பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ., தலைவர் அமித்ஷா போன்றோர்  விதிமீறினால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்று காங்கிரஸ் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுஷ்மிதா தேவ் எம்பி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தக்கல் செய்து உள்ளார். அந்த மனுவில்

பிரதமர் மோடி, பா.ஜ., தலைவர் அமித்ஷா உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் தேர்தல் விதிகளை மீறினால், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

எனவே, இதில் உச்சநீதிமன்றம் தலையிட்டு தேர்தல் ஆணையத்திற்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் தாக்கலானது. இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என்று அவர் அறிவித்தார்.

அந்த மனுவில் தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி இராணுவத்தை பற்றியோ மதம் குறித்தோ பேசுவதற்கு ஆணையம் தடைவிதித்திருக்கிறது ஆனால் மோடியும் அமித்ஷா வும் தொடர்ந்து இராணுவம் குறித்தும் மதம் குறித்தும் மக்களை பிரிவினை படுத்தி பேசி வருகிறார்கள் தேர்தல் ஆணையம் கைகட்டி, வாய் பொத்தி, சும்மா இருக்கிறது. பாஜகவினர் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை அதே நேரம் மற்ற கட்சியை சேர்ந்தவர்கள் என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறது.இது கண்டிக்கத்தக்கது என குறிப்பிடப்பட்டு உள்ளது..  

இந்த மனு விசாரணையின்போது, வழக்கறிஞர்கள் பிரதமரை குறிப்பிடும்போது பெயரை குறிப்பிடுங்கள். பிரதமர் என்று மட்டும் குறிப்பிட்டு கண்ணாமூச்சி விளையாட வேண்டாம் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்  கேட்டு கொண்டார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top