இலங்கை அகதி விடுதலையை தமிழக அரசு 4 மாதத்தில் முடிவு எடுக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

இலங்கை அகதியின் விடுதலை குறித்து தமிழக அரசு 4 மாதத்தில் முடிவு எடுக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அகதியான விஜயன் கடந்த 1988-ம் ஆண்டு ஒரு வீட்டில் கொள்ளையடித்துவிட்டு தப்ப முயன்ற போது துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலி ஆனார்கள். இந்த வழக்கை விசாரித்த திருவண்ணாமலை அமர்வு நீதிமன்றம் விஜயனுக்கு தூக்கு தண்டனை விதித்தது.

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, விஜயனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து 2008-ம் ஆண்டு உத்தரவிட்டது.

தற்போது, வேலூர் சிறையில் உள்ள விஜயன் 30 ஆண்டு சிறைவாசம் அனுபவித்ததை குறிப்பிட்டு, தன்னை விடுவிக்க உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கன்வில்கர், அஜய் ரஸ்தோக்கி ஆகியோர், சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இலங்கை அகதி விஜயனை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு 4 மாதங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய அரசிடம் ஆலோசனை நடத்த தேவை இல்லை என்றும் நேற்று உத்தரவிட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top