உத்தரபிரதேசத்தில் பாஜக வுக்கு பின்னடைவு! கூட்டணியில் இருந்து விலகியது எஸ்பிஎஸ்பி கட்சி

உ.பி.யில் ராஜ்பர் எனும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்சிகளில் ஒன்றாக இருப்பது எஸ்பிஎஸ்பி. கிழக்கு உ.பி.யில் செல்வாக்குள்ள இந்த கட்சி அப்பகுதியை பூர்வாஞ்சல் எனும் தனிமாநிலமாகப் பிரிக்ககோரி வருகிறது.

இந்த பகுதியில் அதன் ராஜ்பர் சமூகத்தினர் சுமார் 18 சதவிகிதம் உள்ளனர். 2017-ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான என்டிஏவுடன் கூட்டணி அமைத்து எட்டு தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் எஸ்பிஎஸ்பி நான்கு எம்எல்ஏக்கள் பெற்றதால் அதன் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பரை தனது கேபினேட் அமைச்சராக்கியது.

மக்களவை தேர்தல் கூட்டணிக்கான பாஜக வுடன் பேச்சுவார்த்தையில் ஐந்து தொகுதிகள் கேட்டு ஓம் பிரகாஷ் ராஜ்பர் வற்புறுத்தி வந்தார்.ஆனால் பாஜக இவரை நம்ப வைத்து ஏமாற்றியது. இவர் காங்கிரஸுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்தபிறகு  தாமரை சின்னத்தில் போட்டியிட பாஜக  வரற்புறுத்தியது.

இந்நிலையில் ,உத்தரபிரதேச அமைச்சரும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் (எஸ்பிஎஸ்பி) தலைவருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகினார். தனித்து போட்டியிட வேண்டி உ.பி.யில் 38 வேட்பாளர்களை அறிவித்தது பாஜகவிற்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top