மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமான சாத்வி பிரக்யா பாஜக வேட்பாளராக போபாலில் போட்டி!

ஆர்எஸ்எஸ்  சித்தாந்தத்தின் வழி வந்த இந்து தீவிரவாதி சாத்வி பிரக்யா சிங் தாக்கூர்.இவர்தான் மாலேகான் மசூதி குண்டு வெடிப்புக்கு காரணமானவர்.பாஜக ஆட்சிக்கு வந்ததும் இவர் மீது உள்ள வழக்குகள் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டன  

மாலேகான் வெடிகுண்டு வழக்கில் சிக்கி விடுதலையான சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் இன்று இந்து அமைப்பிலிருந்து பாஜகவில் இணைந்தார். போபால் தொகுதியில் அவர் பாஜக வேட்பாளராக போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.

கடந்த செப்டம்பர் 2006-ல் மகாராஷ்டிராவின் மாலேகானின் மசூதி அருகே  வெடிகுண்டுத் தாக்குதல் நடைபெற்றது. இதன் முக்கியக் குற்றவாளியாக சாத்வி பிரக்யா கைது செய்யப்பட்டார். அப்போதுதான் தெரிந்தது  பிரக்யா இந்து தீவிரவாதி என்று. தனது 14 வயதில் துறவறம் பூண்ட பிரக்யா ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு இந்துத்துவா தீவிரவாதியாய் மாறினார். மாலேகான் வெடிகுண்டு வழக்கில் இருந்து அவர் சமீபத்தில் விடுதலையானார்.

இந்தநிலையில் நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போபாலில் போட்டியிடக்கூடும் என தகவல்கள் வெளியாகின. ம.பி. மாநிலம் போபாலில் காங்கிரஸ் சார்பில் அதன் முன்னாள் முதல்வர் திக்விஜய் சிங் போட்டியிடுகிறார். போபாலில் கடந்த 1971 முதல் 1984 வரை சங்கர் தயாள் சர்மா போபாலின் எம்.பி.யாக இருந்தார். பிறகு 1989 முதல் அந்தத் தொகுதி பாஜக வசம் இருந்து வருகிறது.

தற்போது இதன் எம்.பி.யாக பாஜகவின் அலோக் சஞ்சார் உள்ளார். இந்த தொகுதியை மீண்டும் கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் அங்கு திக் விஜய் சிங்கை களத்தில் இறக்கியுள்ளது.

இதனால் அவரை எதிர்கொள்ளும் வகையில் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர் பாஜக சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக பிரக்யா சிங் தாகூர் இன்று போபால் உள்ள பாஜக அலுவலகத்துக்கு சென்று முறைப்படி அக்கட்சியில் இணைந்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் ‘‘நான் பாஜகவில் இன்று இணைந்துள்ளேன். எனது கொள்கைகளுடன் பாஜக ஒத்துப்போவதால் அந்த கட்சியில் இணைந்துள்ளேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் முடிவு செய்ய முடியாது. கட்சி தான் முடிவெடுக்கும்’’ எனக் வழக்கம்போல் கூறி உள்ளார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top