வடமாநிலங்களின் மோடி எதிர்ப்புக்கு சினிமா மூலம் தீர்வு; முடிவு எடுக்க ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

மோடியின் ஆட்சி மீது வட மாநிலங்களில் பெரிய அதிருப்தி ஏற்பட்டதால் அதை சரி கட்ட பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ‘பிஎம் நரேந்திர மோடி’ என்ற திரைப்படம் தயாரித்து தேர்தல் நேரத்தில் மக்களிடையே வெளியிட்டால் அதிருப்தி ஓட்டை மாற்றி விடலாம் என மத்தியில் ஆளும் பாஜக திட்டமிட்டது

அதன்படியே இந்தி நடிகர் விவேக் ஓபராய் மோடியாக நடித்து இந்தப் படம் நாடு முழுவதும் கடந்த 11-ம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெறும் நாளில் வெளியாகவிருந்தது. ஆனால் தேர்தல் நேரத்தில் இது மக்களை திசை திருப்பும் செயல் என எதிர்க்கட்சிகள் புகார் அளித்ததால், படத்துக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் முறையிட்டனர். அவர்கள் தங்கள் மனுவில், “இந்தப் படத்தின் சுருக்கமான டிரெய்லர் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது. ஆணையத்தின் தடை, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது” என்று தெரிவித்தனர்.

இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒரு முறை ஆராய வேண்டும். திரைப்படத்தை அனுமதிக்கலாமா அல்லது வேண்டாமா என்று முடிவு எடுக்கும் முன் அதனை தேர்தல் ஆணையம் முழுவதும் பார்க்க வேண்டும். தயாரிப்பாளரின் கருத்தை அறியவேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும். தேர்தல் ஆணையம் தனது முடிவை சீலிட்ட உறையில் வரும் வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.மேலும் இந்த வழக்கை வரும் 22-ம் தேதிக்கு ஒத்தி வைத்தன

ஆளும் கட்சியான பாஜக சார்ப்பு நிலைக்கு ஒரு தடை என்றால் கருத்து சுதந்திரம் என பேச ஆரம்பித்து விடுகின்றனர்.இதே விஷயம் சிறுபான்மையாளர்களுக்கு வந்தால்  கருத்து சுதந்திரம் பற்றி பேசுவதில்லை என சமூக ஆர்வலர்கள் பேசிக்கொள்கிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top