எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி

நாட்டின் காவலாளியான பிரதமர் மோடி 100 சதவீதம் திருடன் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, எல்லா திருடர்களின் பெயரும் மோடி என்றே முடிவது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.


கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பங்கேற்று பேசினார்.


தனது பேச்சினிடையே ரபேல் ஊழல் விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய ராகுல், ‘இந்த நாட்டின் காவலாளி என்று தன்னை கூறும் மோடி 100 சதவீதம் திருடன் என்று நான் குற்றம்சாட்டுகிறேன். 

30 ஆயிரம் கோடி ரூபாயை திருடி தனது திருட்டு நண்பன் அனில் அம்பானிக்கு அவர் கொடுத்து விட்டார்.


நிரவ் மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி, விஜய் மல்லையா, அனில் அம்பானி, நரேந்திர மோடி என்று ஒரு திருட்டுக் கூட்டமே உருவாகியுள்ளது.என்னிடம் ஒரு கேள்வி உள்ளது. நிரவ் மோடி ஆகட்டும், லலித் மோடி ஆகட்டும், நரேந்திர மோடி ஆகட்டும், எல்லா திருடர்களின் பெயர்களும் மோடி என்றே முடிவது ஏன்? இன்னும் இதைப்போல் எத்தனை மோடி வரப்போகிறார்களோ நமக்கு தெரியாது’ என குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top