ஆட்டநாயகன் தோனி காரசார வாக்குவாதம்; பரபரப்பான ஆட்டம் சிஎஸ்கே வெற்றி!

ஐபிஎல் டி20 போட்டித் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த  ராஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 வி்க்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்தது. 152 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியைப்ப பெற்றது.

கடைசி ஓவரி்ல் 18 ரன்களை தேவை எனும்போது  மிகவும் பொறுப்போடு வீசவேண்டிய  பென் ஸ்டோக்ஸ் பதற்றத்தில் சொதப்பி விட்டார்

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி வெற்றிகரமாக 4-வது முறையாக சேஸிங் செய்து வெற்றியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் 7 போட்டிகளில் ஒரு தோல்வி உள்பட 12 புள்ளிகளுடன் சிஎஸ்கே அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இந்த ஆட்டத்தில் தோனி 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 58 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

குறிப்பாக கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்கிற போது, நோபாலாக வீசப்பட்ட பந்துக்கு லெக் அம்பயர் நோபல் கொடுத்தாலும், அதை ஸ்ட்ரைட் அம்பயர் மறுத்து நோபாலை ரத்து செய்தார்.இதனால் பொங்கி எழுந்த தோனி, மைதானத்துக்கு வெளியே இருந்து வந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமைதியின் வடிவமாக தோனியைப் பார்த்த ரசிகர்களுக்கு தோனி நடுவரிடம் அணிக்காக வாதிட்டது வியப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்கு தோனிக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், அனைத்து தடைகளையும் மீறி கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து சிஎஸ்கே வென்றதுதான் முத்தாய்ப்பான விஷயமாகும்.

சிஎஸ்கே அணிக்கு தலைமை ஏற்றபின் தோனி பெறும் 100-வது வெற்றி இதுவாகும். இதுவரை இந்தச் சாதனையை எந்த ஒரு அணியின் கேப்டனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top