தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை இல்லை; கட்சிகள் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்; உச்சநீதிமன்றம்

அரசியல் கட்சிகள் பெரிய பெரிய  கார்பரேட் கம்பெனிகளிடம் நன்கொடை பெறுவதில், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, தேர்தல் பத்திர திட்டத்தை, மத்திய ஆளும் பாஜக அரசு அறிமுகப்படுத்தியது. 

இந்த திட்டத்தை எதிர்த்து. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு, உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் நடந்தது.

இந்த நிலையில், இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தேர்தல் நிதி பத்திரத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், தேர்தல் நிதி பத்திர விவரத்தை சீலிடப்பட்ட கவரில் வைத்து மே.30-க்குள் தேர்தல் ஆணையத்திடம் அனைத்து அரசியல் கட்சிகளும் அளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு உள்ளது

இந்த தேர்தல் நிதி பத்திரம் என்பது என்னவென்றால் ஒரு கார்பரேட் கம்பெனி ஒரு அரசியல் கட்சிக்கு நன்கொடை தரவேண்டும் என்றால் ரூ 20000.மட்டும்தான் கொடுக்கமுடியும் அதற்கு மேல் பணமாக கொடுக்கமுடியாது.பணத்திற்கு பதிலாக வங்கிகளில் தேர்தல் நிதி பத்திரமாக வாங்கி[எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்]

தனக்கு பிடித்த கட்சிகளுக்கு கொடுக்கலாம். ஒரு கம்பெனி எவ்வளவு தேர்தல் நிதி பத்திரம் வாங்குகிறது என்று முழு விவரமும் வங்கியிடம் இருக்கும்.ஆனால் , கம்பெனி யாரிடம் எந்த கட்சிக்கு கொடுக்கிறது என்கிற விவரங்கள் இருக்காது.கடந்த வருடம் அதிகமாக தேர்தல் நிதி பத்திரங்கள் பெற்ற கட்சி பாஜக தான்

வங்கிகளின் மூலமாக யார், யார், எந்த கம்பெனி, எவ்வளவு பத்திரங்கள் வாங்குகிறது என்று ஆளும் கட்சியான பாஜக எளிதாக புள்ளிவிவரங்களை எடுத்துக்கொண்டு அந்த கம்பெனிகளுக்கு வருமானவரி சோதனை அழுத்தங்களை கொடுத்து அந்த நிதி பத்திரங்களை தானே வாங்கி வைத்து கொள்கிறது என்பதுதான் இந்த வழக்கிற்கு அடிநாதமாக இருந்தது ஆனால், உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து விட்டது.   


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top