சுப்ரீம் கோர்ட் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை தொடர்ந்து, அந்த ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

பின்னர் அந்த ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை கடந்த பிப்ரவரி 18–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததோடு, சென்னை ஐகோர்ட்டை அணுகுமாறு ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறந்து பராமரிப்பு வேலையை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு அவசர வழக்காக எடுக்கவேண்டும் என்று கேட்கப்பட்டது.

இந்த வழக்கை அவசர வழக்காக எடுக்க கூடாது என்று மதிமுக தலைவர் வைகோ அவர்கள் தன்னையும் ஒரு மனுதாரராக இணைத்துக்கொண்டு இந்த வழக்கில் தானே ஆஜர் ஆகி வாதாடினார்.உயர்நீதிமன்றமும் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் போடப்பட்ட மனுவை அவசரமாக எடுக்கமுடியாது என்று கூறிவிட்டது

இந்நிலையில், ஸ்டெர்லைட் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், தாங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்க போதிய நேரம் இல்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்து இருப்பதால், எந்திரங்களை பழுதுபார்த்து பராமரிப்பதற்காக ஆலைக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வேதாந்தா நிறுவனத்தின் வழக்கை சுப்ரீம் கோர்ட்டும்  இன்று தள்ளுபடி செய்து விட்டது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top