அமெரிக்காவின் ரகசியங்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் கைது

ஈக்வடார் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர்.

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ரகசியங்களை இணைய தளங்களில் வெளியிட்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியவர்.

உலக மக்களுக்கு எதிராக அமெரிக்கா செய்ய இருந்த ரகசிய வேலைகளையும் அதற்கு துணைபோன மற்ற நாடுகளையும் பொதுவெளியில் அம்பலப்படுத்தினார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே  

பாதுகாப்பு ரகசியங்களை வெளியிட்ட அசாஞ்சேவை கைது செய்ய அமெரிக்கா முயற்சி மேற்கொண்டு வந்தது. ஆனால், அவர்களிடம் சிக்காமல் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்தார்.

இதற்கிடையே, ஜூலியன் அசாஞ்சேவுக்கு ஈக்வடார் நாட்டு குடியுரிமை வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.

இந்நிலையில், ஈக்வடார் நாட்டில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் லண்டனில் இன்று கைது செய்தனர். 

ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருந்த விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார்  கைது செய்துள்ளனர்.

2012ம் ஆண்டு லண்டனில் தஞ்சம் அடைந்த ஜூலியன் அசாஞ்சேவை 7 ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top