முதன் முதலாக கருந்துளை குறித்த உண்மையான படம் வெளியிடப்பட்டது

கருந்துளை என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந்துளை தனக்கு அருகில் இருக்கும், அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் ‘குவாசார்’ என்று அழைக்கப்படுகின்றன. என்றெல்லாம் கற்பிதம் செய்யப்பட ‘கருந்துளை’ இப்போதுதான் இந்த பூலோக மனிதர்களின்-விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியில் கைவரப்பெற்றிருக்கிறது.

பூமியின் தரைப்பரப்பிலிருந்து ஒருபொருளை சுமார் நொடிக்கு 11.2 கிமீ என்ற வேகத்தில் எறிந்தால் அந்தப் பொருள் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி வெளியேறிவிடும். இதுவே பூமியின் விடுபடு வேகம். பூமியைவிட பருத்த வியாழன் கோளில் இது 59.5 km/sec. குறிப்பிட்ட திணவு கொண்ட பொருளில் விடுபடு வேகம் ஒளியின் வேகத்தைவிட மிஞ்சும் என ஜான் மிச்சல் (John Mitchell) எனும் ஆங்கிலேயே அறிஞர் 1783 இல் நியூட்டன் இயற்பியலைக் கொண்டு மெய்பித்தார். இதுவே கருந்துளைகளின் துவக்க ஆய்வு. அதன் பின்னர் பிரெஞ்சு அறிவியல் அறிஞர் பியர் சிமோன் லாப்பிளாஸ் (Pierre-SimonLaplace) ஆறு கிலோமீட்டர் விட்ட பந்து அளவில் சூரியனின் மொத்த நிறையையும் அடைத்துவிட்டால் ஏற்றப்படும் ஈர்ப்பு புலத்தில் ஒளி கூட வெளியே வர முடியாது என்று கூறினார்

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தின் தொடர்ச்சியாக இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தக் கருத்து தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 1916 இல் கார்ல் சுவார்ட்ஷில்ட் (Karl Schwarzschild). அவரைத் தொடர்ந்து 1958 இல் டேவிட் ஃபிங்கல்ஸ்டீன் (David Finkelstein) 1967 இல் ஜான் வீலர் (John Wheeler) எனும் இயற்பியலாளர் ‘கருந்துளை’ (blackhole) என்ற பெயரை பிரபலப்படுத்த அதுவே நிலைத்துவிட்டது. எனினும் சாமானியர்களும் கருந்துளைகள் குறித்து கேள்விப் படவைத்த பெருமை ஸ்டீபன் ஹாகிங்கைதான் சாரும்.

இந்த அதிசய கருந்துளையை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகிற நிலையில், நவீன கருவிகளைப் பயன்படுத்தியும்,  இதுவரை  கருந்துளைகள் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை.

கருந்துளை என்றுமே ஒரு புரியாத புதிராக, மர்மமாகத்தான் இருந்து வருகிறது. ஆனாலும், கருந்துளைகளை ஆய்வு செய்து அவற்றை புரிந்துகொள்ள முயலும் விண்வெளி ஆய்வு முயற்சிகள் தொடர்ந்த நிலையில், உலக விஞ்ஞானிகள் இணைந்து உலகின் ஐந்து இடங்களில் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்த்தி 26,000 ஒளியாண்டு தொலைவில் உள்ள சஜிடேரியஸ் A மற்றும் 6 கோடி ஒளியாண்டு தொலைவில் உள்ள M87 எனும் கேலக்சியின் மிகப்பெரிய கருந்துளை ஆகியவற்றை புகைப்படம் எடுத்து சாதனை படைத்துள்ளோம் என அறிவித்துள்ளனர். இதுவே கருந்துளைகளின் முதல் முதல் புகைப்படம்.ஆகும்

ஆஸ்ட்ரோபிசிக்கல் ஜர்னலில்  விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளதன் அடிப்படையில்

இது எட்டு சூப்பர் தொலைநோக்கியின் இணைப்பு மூலம் நிகழ்ந்த நிகழ்வு  என்றும்  ஹொரிசன் தொலைநோக்கி (EHT) மூலம் இது சாத்தியப்பட்டது என்றும்  நெதர்லாந்தில் உள்ள ராட்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹீனோ ஃபால்சே, பி.ஜே. நியூஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்தபோது, ​​M87 என்று அழைக்கப்படும் ஒரு மண்டலத்தில் கருப்பு துளை கண்டுபிடிக்கப்பட்டதையும் தெரிவித்தார்.

 

மேலும், பேராசிரியர் ஃபால்சே {Falcke } கூறும்போது “ஒரு முழுமையான வட்ட இருண்ட துளை போன்று ஒரு தீவிர பிரகாசமான ‘தீ மோதிரம்’ போன்றும் பிரகாசமான ஒளிவட்டம் சூடான வாயுவால் துளைக்குள் விழுகிறது. விண்மீன் கூட்டணியில் உள்ள அனைத்து பில்லியன் கணக்கான நட்சத்திரங்களையும் விட ஒளி வெளிச்சமாக இருக்கிறது – இது பூமியில் இருந்து தொலைவில் காணப்படக்கூடியது. மையத்தில் உள்ள இருண்ட வட்டத்தின் விளிம்பு என்பது எரிவாயு துருவத்தில் நுழையும் புள்ளியாகும், இது ஒரு பெரிய ஈர்ப்பு விசையைக் கொண்ட ஒரு பொருளைக் கொண்டுள்ளது, இதில்  ஒளி கூட தப்பிக்க முடியாது. என்று கூறுகிறார்

விஞ்ஞானிகள் இதுகுறித்த ஆய்வறிக்கையை,   கருந்துளை  கதிர்வீச்சுகளை வரைபடமாக்கி உள்ளனர். அதனையும் வெளியிட்டு உள்ளனர்

அமெரிக்கா, சிலி, ஸ்பெயின், மெக்சிகோ, அண்டார்டிகா, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வெவ்வேறு இடங்களில் எட்டு தொலைநோக்கிகள் உள்ளன. பூமியின் அளவிலான தொலைநோக்கிப் பயன்பாட்டைப் போலவே இது உருவாக்கப்பட்டுள்ளது.

 

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top