அருவருக்க வைக்கும் அஸ்வின்! மீண்டும் மன்கட் அவுட்? கோபத்துடன் வெளியேறிய நபி

மொஹலியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மன்கட் அவுட்டை தவிர்க்கும் வகையில் வார்னர் செயல்பட்டதும், முகமது நபி ரன் அவுட் ஆகிய விதமும் மீண்டும் அஸ்வின் மீது சர்சை பேச்சை எழுப்பியுள்ளது.

விளையாட்டு என்பது விளையாடி ஜெயிப்பது தந்திரமாக சூழ்ச்சி செய்து ஜெயிப்பது இல்லை.என்பதை அஸ்வினுக்கு யார் சொல்லப்போகிறார்கள் என்று விளையாட்டு வீரர்கள் பேச ஆரம்பித்து விட்டார்கள்  

மொஹலியில் நேற்று ஐபிஎல் போட்டியின் 22-வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. 151 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி ஒரு பந்து மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது.

 இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி பேட்டிங் செய்தபோது இரு சம்பவங்கள் நடந்தன. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது, ஜோஸ் பட்லரை தந்திரமாக மன்கட் அவுட்செய்த அஸ்வின் செயல் பெரும் சர்ச்சையானது.

இந்நிலையில், நேற்று கிங்ஸ்லெவன் பஞ்சாப், சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் அஸ்வின் செயல் விளையாட்டு வீரர்களை முகம் சுழிக்க வைத்தது.

சன்ரைசர்ஸ் அணி முதலில் பேட் செய்தது.  7-வது ஓவரை அஸ்வின் வீசினார். நான்-ஸ்டைர்க்கர் பகுதியில் வார்னர் நின்றிருந்தார். அஸ்வின் பந்துவீசும்  போது, எல்லைக் கோட்டிக்கிற்கு வெளியே செல்ல முயன்ற வார்னர், மன்கட் அவுட்டை நினைத்துப்பார்த்து, மீண்டும் பேட்டை தரையில் தேய்த்துக்கொண்டு கிரீஸுக்குள் கொண்டுவந்துவிட்டார்.

அஸ்வின் பந்துவீசும்போது தேவையில்லால் கிரீஸை விட்டு வெளியே சென்றால், அஸ்வின் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் தந்திரமாக வெற்றி பெற மன்கவுட் அவுட்டை பயன்படுத்துவார்  என வார்னர் பேட்டை கிரீஸுக்குள் கொண்ட சென்ற சம்பவத்தை ஐபிஎல் வீடியோவாக வெளியிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களுக்குப்பின் மைதானத்தில் இருந்த பெரிய திரையில் ஒளிபரப்பானதும் அனைவரும் சிரித்துவிட்டனர்.

மற்றொரு சுவாரஸ்யமான ரன்அவுட்டும் நிகழ்ந்தது. இதை மன்கட் அவுட் என்று சொல்வதா, அல்லது ரன் அவுட் எனச் சொல்வதா என வர்ணனையாளர்கள் நகைச்சுவையாகக் கூறி  இதை ரன் அவுட் என்றே கூறினர்.

14-வது ஓவரை அஸ்வின் வீச, அதை வார்னர் எதிர்கொண்டார். நான்-ஸ்டிரைக்கர் பகுதியில் முகமது நபி நின்றிருந்தார். அஸ்வின் வீசிய 2-வது பந்தை வார்னர் நேராக அடித்தார். அதை தடுக்க முற்பட்டு அஸ்வின் மறைத்தார்.

அப்போது, நான்-ஸ்டிரைக்கர் பகுதியில் நின்றிருந்த முகமது நபி கிரீஸை விட்டு வெளியே வெகுதொலைவு சென்றுவிட்டதால், கையில் இருந்த பந்தால் அஸ்வின் ரன் அவுட் செய்தார். இதைப் பார்த்த முகமது நபி மிகுந்த வெறுப்புடன் தலையை அசைத்தபடி வெளியே சென்றார்.

அஸ்வினுக்கு பயந்து வார்னர் கிரீஸுக்கு வெளியே பேட்டை கொண்டுவந்து பின் உள்ளே கொண்டு சென்றதும், முகமது நபியை ரன்அவுட் செய்த அஸ்வினின் செயலும் விளையாட்டு வீரர்கள் முகம் சுழிக்க வைத்தது

விளையாடி வெற்றிபெறும் வீரர்களிடையே தந்திரமாக சூழ்ச்சியில் வெற்றி பெரும் அஸ்வினின் செயல் அருவருக்கவைத்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top