சென்னை-சேலம் 8 வழிச்சாலை ரத்து:தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை-சேலம் 8 வழிச்சாலை ரத்து தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது மு.க.ஸ்டாலின் அறிக்கை 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை ஐகோர்ட்டு ரத்து செய்திருக்கிறது. விவசாயிகளை அழைத்து பேசுங்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டசபையில் நான் முன்வைத்த கோரிக்கையைக் கூட ஏற்க மறுத்தார் எடப்பாடி பழனிசாமி. இத்திட்டத்தை எதிர்த்து வழக்குப்போட்ட டாக்டர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்ட பிறகு சேலம் 8 வழிச்சாலை பற்றி பேசுவதையே தவிர்த்தார். எடப்பாடியும், அன்புமணியும் கூட்டணி வைத்துக்கொண்டனர். ஆனால் விவசாயிகளை ஐகோர்ட்டு இந்த தீர்ப்பின் மூலம் காப்பாற்றியிருக்கிறது. தீர்ப்பை கேட்டு பட்டாசு வெடித்து விவசாயிகள் கொண்டாடியிருப்பதும், தங்களின் நிலங்களில் போட்ட கல்களை பிடுங்கி எறிந்திருப்பதும் இந்த தீர்ப்பு மக்களுக்கு தந்துள்ள மகிழ்ச்சியை காட்டுகிறது.

மக்களின் உணர்வுகளை மதிக்காத எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு மரண அடி கொடுத்திருக்கிறது. விவசாயிகளை கொடுமைப்படுத்திய எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யமாட்டேன் என்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக அறிவிக்க வேண்டும். சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்காக வழக்குப்போட்ட பா.ம.க. இந்த வாக்குறுதியை அ.தி.மு.க. அரசிடமிருந்து பெற வேண்டும். அப்படி வாக்குறுதி அளிக்க தவறினால் அ.தி.மு.க கூட்டணியிலிருந்து பா.ம.க. வெளியேறுமா?. இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top