ரபேல் ஊழலை அம்பலப்படுத்தும் புத்தகங்கள் பறிமுதல்; தேர்தல் ஆணையத்தின் பெயரில் போலிஸ் அத்துமீறல்!

நாட்டை உலுக்கிய ஒரு மாபெரும் ஊழல் மக்களின் எதிர்ப்புக்குள்ளாகாமல் புதைகுழிக்குப் போய்க் கொண்டிருக்கிறது. அதுதான் ரபேல் பேர ஊழல். இது இந்திய விமானப் படைக்கு போர் விமானங்கள் வாங்குவது சம்பந்தமான பேரம்.


ரபேல் பேர ஊழல் மூலம் போர் விமானம் வாங்குவதில் முறைகேடு செய்ததோடு, அதன் மூலம் ஊழலை ஒழிப்பதற்கு உருவாக்கப்பட்ட நடைமுறைகளை கைவிட்டு, அரசின் கொள்முதல் செலவினங்களை தணிக்கை செய்யும் தலைமை தணிக்கை அதிகாரியை மிரட்டியும், உச்சநீதிமன்றத்துக்கு தவறான தகவல்கள் தந்தும் அந்நிறுவனங்களையும் சீர்குலைத்திருக்கிறது மோடி அரசு நமது நாட்டின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்படும் நிதி ஆண்டுக்காண்டு அதிகரித்துக் கொண்டே போய் 2018-19ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அது ரூ 3,59,854 கோடியைத் தொட்டது.

ரபேல் ஊழல் தொடர்பாக சென்னையில் இன்று வெளியிடப்பட இருந்த புத்தகங்களை திடீரென போலீசார் பறிமுதல் செய்தது

இது தொடர்பாக விசாரித்ததில் தேர்தல் ஆணையத்தின் பெயரைச்சொல்லி தமிழக காவல்துறை இந்த நடவடிக்கையில் இறங்கியது தெரியவந்தது.இது குறித்து தேர்தல் ஆணையம் நாங்கள் பறிமுதல் செய்ய அனுமதி கொடுக்கவில்லை என   விளக்கம் அளித்துள்ளது.

பாஜக ஆட்சியில் ராணுவத்துக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்கியதில் ஊழல் நடைபெற்றுள்ளது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ரபேல் ஊழல் தொடர்பாக பல்வேறு தகவல்களை பத்திரிகைகள் தொடர்ந்து வெளியிட்டு வந்தது.

இதற்கிடையே, இந்து பத்திரிகையில் வெளியான தகவல்களை தொகுத்து எஸ்.விஜயன் என்பவர் ‘நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை பாரதி புத்தகாலயம் பதிப்பித்துள்ளது.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறுவதாகவும், அதில் பல முன்னணி பத்திக்கையாளர்கள் பங்கேற்கிறார்கள் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இன்று பிற்பகல் பாரதி பதிப்பகம் சென்ற போலீசார் அங்கிருந்த ரபேல் ஊழல் தொடர்பான புத்தகங்களை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, பாரதி பதிப்பக உரிமையாளர் பா.கு.ராஜன் கூறுகையில், பொது தகவல்களின் அடிப்படையில் இந்த புத்தகம் தொகுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை நாங்கள் பதிப்பித்து உள்ளோம். தேர்தல் ஆணையம் மற்றும் அரசு ஆகியவை திடீரென இந்த புத்தக்கத்தை எதிர்ப்பதற்கான காரணம் தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ரபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரபேல் ஊழல் குறித்த புத்தகங்களை பறிமுதல் செய்ய இந்திய தேர்தல் தேர்தல் ஆணையம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இது தொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் உடனடியாக அறிக்கை அளிக்க கேட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார். 

அரசின் அழுத்தத்தால் தொடர்ந்து இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினர் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமா  என்று பொதுமக்கள் கேட்கிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top