‘உச்சக்கட்டம்’ சினிமா விமர்சனம்; படம் போகிற வேகத்தில் லாஜிக்கை தொலைத்து விட்டது

ஒரு கொலையை பார்த்து,  வீடியோவாகவும் படம் பிடித்த  கதாநாயகி தன்ஷிகாவை  கொலை செய்ய வரும் கொலையாளிகளிடமிருந்து ஹீரோ  அனூப் சிங் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை

அனூப் சிங் மற்றும் தன்ஷிகா இருவரும் காதலர்கள். புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக இருவரும் தனியார் விடுதிக்கு செல்கின்றனர். அங்கு, நடக்கும் கொலை ஒன்றை ஏதேச்சையாக மொபைல் போனில் வீடியோவாக படம் பிடிக்கிறார் தன்ஷிகா. இதைக்கண்டு அதிர்ந்த கொலைக் கும்பல், தன்ஷிகாவை கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்.

இதிலிருந்து தன்ஷிகாவை அனூப் சிங் எப்படி காப்பாற்றினார்? கொலை செய்யப்பட்டது யார், கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிங்கம் 3 படத்தில் வில்லனாக பார்த்திருந்த  அனூப் சிங்கை , இப்படத்தில் ஹீரோவாக பார்க்கிறோம். நல்ல உடற்கட்டோடு, ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். சாய் தன்ஷிகா, ரவுடி கும்பலிடம் சிக்கி தவிக்கும் காட்சிகளிலும், கார் டிக்கியில் சிக்கிக் கொண்டு பரிதவிக்கும் காட்சிகளிலும் அபாரமாக நடித்திருக்கிறார் . இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் தன்யா ஹோப் தனது அழகான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வேதாளம் படத்தின் வில்லனாக நடித்த கபீர் சிங், இப்படத்திலும் வில்லனாக மிரட்டியிருக்கிறார்.

ஒளிப்பதிவு விஷ்ணுவர்தன், பின்னணி இசை சஞ்சய் சௌத்ரி, கர்நாடகா மாநில காடுகளை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

விறுவிறுப்பாக திரைக்கதையுடன் படத்தை இயக்கி இருக்கிறார் சுனில்குமார் தேசாய். விறுவிறுப்பு ஒன்றே குறிக்கோள் என கடிவாளம் போட்டது போன்று நேர்கொண்ட பார்வையுடன் படத்தை மிக வேகமாக நகர்த்துகிறார். லாஜிக் பார்க்காமல் படத்தை பார்ப்பவர்களுக்கு இந்த படம் உச்சக்கட்டமாக இருக்கும்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top