பிரதமர் மோடிக்கு மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளால் அச்சம் ஏற்பட்டுள்ளது- திருமாவளவன்

மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுவதாக திருமாளவன் தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அரியலூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-


கொடநாடு விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருக்கிறது என்பதை நாடே கவனித்து கொண்டிருக்கிறது. கொடநாடு பகுதியின் ஓரஞ்சாரத்தில் கூட எதிர்க்கட்சியினர் சென்றிருக்க வாய்ப்பில்லை.

தேர்தல் பரபரப்பான ஒரு சூழலை எட்டிக்கொண்டிருக்கும் நிலையில் அதனை திசை திருப்புவதற்கான முயற்சியில் தமிழக முதல்வர் ஈடுபடுவதாக தெரிகிறது.

தமிழகத்தில் தி.மு.க. அமைத்துள்ளது தான் வலுவான அணி. இது கொள்கை கூட்டணி. இந்த அணி மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது என்பதை உணர்ந்த நிலையில் தமிழக முதல்வர் கொடநாடு கொள்ளை, கொலை சம்பவங்களில் தி.மு.க.வை முடிச்சு போட்டு பேச முயற்சிக்கிறார். உண்மை எது? என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். சட்டமும் அதனை விரைவில் வெளிக்காட்டும்.

அதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள தி.முக. கூட்டணியை கண்டு பிரதமர் மோடி அச்சம் கொண்டுள்ளார். காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை பெற்று வருகின்றது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் வலுப்பெற்று வருகிறது என்பதை கண்டு மோடி அச்சப்படுகிறார் என்பதை இதன் மூலம் நான் புரிந்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top