7 பேர் விடுதலை; தமிழக அரசு தீர்மானத்தை, அதிமுக தேர்தல் அறிக்கையை குப்பையில் போடுங்கள்:சு.சுவாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஏழு  நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய சாத்தியமே இல்லை என எம்.பியும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள ஏழு  நிரபராதி தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பி பல மாதங்கள் ஆகியும் கவர்னர் அந்த தீர்மானத்தின் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை. தமிழக அரசும் கவர்னருக்கு இது குறித்து எந்தவிதமான நினைவூட்டலையும் அளிக்கவில்லை.  பலவிதமான போராட்டங்கள் ஜனநாயகரீதியில் நடத்தப்பட்டும் தமிழக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசும் இது குறித்து கவலைக்கொள்வதில்லை.

ஆனால், இந்த பாராளுமன்ற தேர்தல் அறிக்கையில் அதிமுக ஏழுபேர் விடுதலையை ஆதரித்து அறிக்கை விட்டிருக்கிறது.திமுகவும் தேர்தல் அறிக்கையில் ஏழுபேர் விடுதலை குறித்து பேசியிருக்கிறது

இன்று சென்னை வந்த சுப்பிரமணியன் சுவாமி. திடீரென இதுதொடர்பாக விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அதிமுக தேர்தல் அறிக்கைக்கு எதிராகவும் தமிழக அரசு தீர்மானத்திற்கு எதிராகவும் பேசினார் .

”ராஜீவ் காந்தி கொலைகாரர்களை விடமாட்டோம். என்ன ஆனாலும் விடுதலை கிடையாது. எழுவர் விடுதலை குறித்துக் கூறப்பட்டுள்ள அதிமுக, திமுக  அறிக்கையைத் தூக்கிக் குப்பைத்தொட்டியில் போடுங்கள்.என்று பேசினார்.

தமிழக அரசு ஒட்டுமொத்த தமிழர்களின் குரலாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை குப்பைக்கூடையில் போடச்சொல்வது எந்தவகையில் நியாயம்? இது குறித்து அதிமுக கண்டனம் தெரிவிக்குமா? கூட்டணி கட்சியின் பெரிய பதவியில் இருக்கும் ஒரு நபர் இப்படி சிறுபிள்ளைத்தனமாக பேசுவது கூட்டணி தர்மத்திற்கு எதிரானது இல்லையா வழக்கம்போல அதிமுக இதை கண்டுக்கொள்ளாமல் நகர்ந்து விடுமா? என பல கேள்விகள் எழுகிற இந்த நேரத்தில்  

.மாநில அந்தஸ்தில் இருக்கிற தமிழிசைக்கு டெல்லியின் கொள்கைகள் தெரியாது. இதுகுறித்து டெல்லிதான் முடிவு செய்ய வேண்டும். என தமிழிசைக்கு எதிராகவும்  சுப்பிரமணி சாமி பேசியிருக்கிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top