மக்கள் குடிநீருக்கு போராடியபோது தூங்கிய தமிழகஅரசு இன்று 24 மாவட்டங்கள் வறட்சி பகுதியாகஅறிவித்திருக்கிறது!

தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது தமிழக அரசு

போதிய மழை பெய்யாததால், தமிழகத்தில் சென்னை உள்பட 24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது

இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ காலத்தில் பெய்த மழையளவு பகுப்பாய்வு செய்யப்பட்டது. அதில் கோவை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள 38 வட்டாரங்கள் பற்றாக்குறை மற்றும் மிக பற்றாக்குறை என்ற அளவில் மழைப்பொழிவை பெற்றுள்ளன.

அங்கு நிலத்தடி நீர் குறைந்திருப்பதால் கோடை காலத்தில் நீரியல் வறட்சி ஏற்படும். எனவே இந்த வட்டாரங்கள் வறட்சி வட்டாரங்களாக அறிவிக்கப்படுகின்றன.

அதுபோல மழைப்பொழிவை குறைவாக பெற்றுள்ள சென்னை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், சேலம், வேலூர், திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர், காஞ்சீபுரம், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், நாகை, கடலூர், ராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்கள் நீரியல் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படுகின்றன.

வருமுன் காப்பது அரசின் கடமை. ஆனால், பேரிடர் வந்தபிறகும் அதை பற்றி கவலை படாமல் இருப்பதுதான்  தற்போதைய அரசின் நிலைமை

குடிநீர் இல்லாமல் ஆங்காங்கே  மக்கள் குடத்துடன் தெருவில் வந்து போராடும் போது காவல்துறைக்கொண்டு மிரட்டி, தாக்கியது தமிழக அரசு. மக்கள் போராடுகிறார்கள் உடனடியாக அதற்கு தீர்வு காண வேண்டும் என்கிற குறைந்த பட்ச அறம் கூட இல்லாமல் இன்று  24 மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து இருக்கிறது இந்த அரசின் கையாலாகாதத் தனத்தைத்தான் காட்டுகிறது.               


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top