திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம்;அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்

தமிழகத்தில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

திமுக தலைவர் ஸ்டாலின் தங்கள் கட்சி தேர்தல் அறிக்கையை இந்த தேர்தலின் கதாநாயகன் என்று வர்ணித்துள்ளார்..

மத்திய அரசிடம் கோரிக்கை மனு கொடுப்பதைப் போல நாசூக்காக ‘வலியுறுத்துவோம், கோரிக்கை விடுப்போம், முயற்சிப்போம்’ போன்ற வார்த்தைகளை பயன்படுத்திய அதிமுக தேர்தல் அறிக்கை போல் அல்லாமல் நாட்டின் மிக முக்கியமான அனைத்துப் பிரச்சினைகளையும் திமுக தேர்தல் அறிக்கை தொட்டுப் பார்த்துள்ளது

 இந்நிலையில் மேலும், கூடுதலாக  அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகை பயிர்க்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பில் திமுக திருத்தம் செய்துள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைமைக்கழகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில், “சிறு, குறு விவசாயிகளின் அனைத்து வகைப் பயிர்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு பதிலாக, விவசாயிகளின் கோரிக்கை மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் விருப்பத்தை ஏற்று, அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.    


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top