“அரசை எதிர்த்தால் தேசவிரோத சட்டம்” மோடியை கடுமையாக விமர்ச்சித்த பிரியங்கா காந்தி

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் “மக்களை நசுக்கும் பிரதமர் மோடி தலைமையலான அரசு, எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் மீது தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்கிறது” என்று கடுமையாகச் சாடினார்.

உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு மண்டல தேர்தல் பொறுப்பாளரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி 3 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

முதல் நாளான இன்று கங்கை நதிவழியாக படகில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரியாங்கா ஈடுபட்டார். பெரும்பாலான நிஷாத், மால்லா சமூகத்தினர் கங்கை நதிக்கரையின் ஓரத்தில் வசிப்பதால், அவர்களை படகின் மூலம் சென்று சந்தித்து தேர்தல் பிரச்சாரத்தில் பிரியங்கா காந்தி ஈடுபட்டார்.

அப்போது பிரியாங்கா காந்தி பேசியதாவது:

இப்போது மோடி அரசின் முன் எந்த ஒரு விஷயத்தையும், பிரச்சினையையும் எழுப்பினால், நாம் நசுக்கப்படுகிறோம், லத்தியால் தாக்கப்படுகிறோம், தேசவிரோதி என்று குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறோம்.

இந்த அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், பேசுவர்கள் மீது தேசவிரோத சட்டம் பாய்கிறது. மக்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இந்த தேசம் அனைவருக்குமானது. இந்த தேசம் உங்களுடையது, ஜனநாயகம் உங்களுடையது, இந்த அரசியல்கூட உங்களுடையதுதான். மக்கள்தான் எஜமானார்கள். மக்கள் இல்லாமல் இந்த பிரியங்கா காந்தி இல்லை. இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

பிரியங்கா காந்தி தனது பிரச்சாரத்தை முடித்துவிட்டு கரைக்குத் திரும்பியபின், தனது பாதுகாப்பு மரபுகளை மீறி, பெண்கள், குழந்தைகள், தொண்டர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 25-க்கும் மேற்பட்ட பெண் மாணவிகளுடன் கல்வி தொடர்பாக உரையாடினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top