தூத்துக்குடி போல ஒடிசா வேதாந்தா ஆலையில் போராட்டம்: போலிஸ் தடியடி; ஒருவர் உயிரிழப்பு

வேதாந்தா குழுமத்தின் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் 13 பேர் தமிழக காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.இது பற்றிய விசாரணைகள்,வழக்குகள் நடைப்பெற்று வரும் சூழலில் ஒடிசாவில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி விரட்டியதில் ஒருவர் உயிரிழந்து இருக்கிறார்     

ஒடிசாவில் லான்ஜிகர் பகுதியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான அலுமினிய சுத்திகரிப்பு ஆலை 250 ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கு எதிராக உள்ளூர் மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு தரப்பினர் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பின்னணியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கோரி பிரதான வாயிலில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களை ஓஐஎஸ்எப் போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டக்காரர்கள் ஆலைக்குள் நுழைந்தனர்.

அவர்களை போலீஸார் தடுத்தபோது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். இதில் தானி பத்ரா (45) என்பவர் உயிரிழந்தார். 40 பேர் காயமடைந்தனர். அவர்கள் லான்ஜிகர், விஸ்வானந்தபூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் லான்ஜிகரில் 144 தடைஉத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆலைக்கு செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒடிசாவின் நியாம்கிரி மலைப்பகுதியில் பாக்ஸைட் தாதுவை வெட்டியெடுக்க வேதாந்தா குழுமம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதை எதிர்த்து அந்தப் பகுதி பழங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய ஒன்றியத்தின் இயற்கை வளத்தை காக்க ஓடிசாவில் பழங்குடி மக்கள் போராடி காவல்துறையால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள். தமிழகத்தின் சுற்றுசூழலை பாதுகாக்க தூத்துக்குடி மக்கள் போராடி காவல்துறையால் சுட்டுக்கொல்லப்படுகிறார்கள்.ஆக போராடுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டிய காவல்துறை  கார்பர்ரெட் வேதாந்தா குழுமத்திற்காக கைகெட்டி வேலை செய்கிறது என்று சமூகவளைத்தளத்தில் மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top