அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு;ஏமாற்றம் தருகிறது மக்கள் கருத்து

இந்த தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசினார். தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்கள் வருமாறு:-

அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.1500 வழங்க வலியுறுத்தப்படும். மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல்மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

நீர் மேலாண்மை திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள வலியுறுத்தப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்க அளிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 

தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுக்கான சட்டம் இயற்ற மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். மதம் மாறினாலும் சாதிரீதியான இட ஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்தப்படும். பொது சிவில் சட்டதை அமல்படுத்தக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், நீட் தேர்வை கொண்டுவந்து பல ஏழை மாணவர்களின் கனவை மட்டுமல்ல, உயிரையும் சிதைக்கவைத்து விட்டு இந்த தேர்தலில் ஓட்டுக்காக நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்துவோம் என்றால் யார் நம்புவார்கள்?

இப்படிதான் அதிமுக வின் தேர்தல் அறிக்கை வெற்று வார்த்தைகளாக இருக்கிறது

கலைஞர் கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் கொடுத்துவந்த முதியவர்களுக்கான பென்சன் நிறுத்தப்பட்டு இன்று ஆதரவற்ற முதியவர்கள் பேருந்து நிலையங்களிலும் ,இரயில் நிலையங்களிலும் கையேந்தி பிச்சை எடுக்க காரணமான இந்த அதிமுக-பாஜக ஆட்சி, இந்த தேர்தலில் ஓட்டுக்காக “அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டத்தின்கீழ், வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும்” என தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது மக்களை ஏமாற்றவே என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும்படி கவர்னரிடம் வலியுறுத்துவோம் என சொல்கிறது  தேர்தல் அறிக்கை ஆனால்,அதிமுக அரசு  ஒருமுறை கூட கவர்னரிடம் இது குறித்து பேசவும் இல்லை, அழுத்தம் கொடுக்கவும் இல்லை.

தமிழக மக்களை வஞ்சிக்கும் விதமாக பாஜக வுடன் கூட்டணி அமைத்து தமிழக உரிமைகளை அனைத்தையும் விட்டுகொடுத்துவிட்டு இப்போது தேர்தலுக்காக அனைத்தையும் மீட்போம் என்றால்  மக்கள் எப்படி நம்புவார்கள்?  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top