சுஷ்மா சுவராஜ் மாலத்தீவு அதிபர் முகம்மது சோலியுடன் சந்திப்பு

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று மாலத்தீவு சென்றார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான மாலத்தீவுக்கு நேற்று  புறப்பட்டுச்சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மாலத்தீவு அதிபர் இப்ராகிம் முகம்மது சோலியை சுஷ்மா சுவராஜ் சந்தித்து பேசினார். இந்த பேச்சுவார்த்தையின் போது இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

மாலத்தீவு அதிபராக இப்ராகிம் முகமது சோலி கடந்த நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு, இந்தியா சார்பில் அந்நாட்டுக்கு மேற்கொள்ளப்படும் முதல் அரசுமுறைப் பயணம் இதுவாகும். முன்னதாக, முகமது சோலி அதிபராகப் பதவியேற்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். 

முந்தைய அதிபர் அப்துல்லா யாமீன் ஆட்சியில் இருநாடுகளுக்கும் இடையே பலவீனம் அடைந்த நல்லுறவை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் சுஷ்மா சுவராஜ் பயணம் அமையும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top