ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ்.க்கு எதிரான கே.சி.பழனிசாமியின் வழக்கு; அவசரமாக விசாரிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்

அ.தி.மு.க.வின் கொள்கை விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது சட்ட விதிகளுக்கு புறம்பானது என்பதால் வேட்பாளர்களின் வேட்பு மனுவில் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கையெழுத்திட தடை விதிக்க கோரி முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். ஆனால், தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளதால், வழக்கை அவசரமாக விசாரிக்கக் கோரி கே.சி.பழனிசாமி தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

கே.சி.பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று அவரது வழக்கை நாளை அவசர வழக்காக விசாரிப்பதாக  டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top