மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் கட்சியிலிருந்து விலகல்

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

மாநிலப் பொறுப்பாளர் சி.கே.குமரவேல் அக்கட்சியிலிருந்து விலகுவது என்பது பரபரப்பானது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும், கடலூர், நாகை மண்டல பொறுப்பாளருமான கடலூரைச் சேர்ந்த சி.கே.குமரவேல், கடலூர் மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்படவிருந்த நிலையில், இன்று (திங்கள்கிழமை) அக்கட்சியிலிருந்து விலகுவதாக கட்சித் தலைமையிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சி.கே.குமரவேலுவிடம் கேட்டபோது, “உட்கட்சிப் பூசல் அதிகமாக இருப்பதாக உணர்ந்து கடந்த சனிக்கிழமை கட்சித் தலைவர் கமல்ஹாசனிடம் எடுத்துக் கூறினேன். அவர் அதற்கு சரியான பதிலையும் கூறாததால், கட்சித் தலைமைக்கு ராஜினாமா கடிதம் அனுப்பி வைத்துள்ளேன்” என்றார்.

இதற்கு முன்பாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை நேர்முகத்தேர்வு செய்து தேர்தெடுத்தது கோவை சரளாவும் ,ஸ்ரீப்ரியாவும்தான்.இது பெரிய சர்ச்சையை உண்டு பண்ணியது.உலகின் பெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்ற தேர்தலுக்கு இந்த கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்து அனுப்புவது மார்க்கெட் போன இரு நடிகைகளா? என கட்சிக்குள்ளேயே விவாதம் நடைப்பெற்றது

சி.கே.குமரவேல், கெவின்கேர் என்ற நிறுவன குழுமத்தைச் சேர்ந்தவர். கட்சிக்கு அதிக பணம் கொடுத்தவர் சி.கே.குமரவேல் மேலும், தேர்தலுக்கு பெரிய தொகையை கமலஹாசன் கேட்டதால் விலகிவிட்டார் என்ற செய்தியும் வருகிறது

.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top