நியூசிலாந்து மசூதியில் துப்பாக்கி சூடு:தீவிர வலதுசாரியான குற்றவாளி பேஸ்புக் நேரலையில் ஒளிபரப்பினான்

நியூசிலாந்து நாட்டின்  முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல் நூர்  மசூதியில் அடையாளம் தெரியாத நபர்  துப்பாக்கிச்சூடு நடத்தியதாக  தகவல் வெளியாகியுள்ளது.

கிறிஸ்ட்சர்ச் நகரில் இரு மசூதிகளில் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்

இதில் ஒரு மசூதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராமலில் நேரலை(லைவ்) செய்து கொண்டே துப்பாக்கிச் சூடு நடத்தியது கண்டுபிடுக்கப்பட்டு, அந்த வீடியோ நீக்கப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக இதுவரை 3 ஆண்கள், ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதி மற்றும் லின்வுடந் பகுதியில் உள்ள மசூதிகளில் இன்று வெள்ளிக்கிழமை தொழுகையில் முஸ்லிம்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் ஏராளமானோர் குண்டுகாயம் பட்டு ரத்த வெள்ளத்தில் சிலர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

இரு மசூதிகளிலும்  துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால், போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, கிறிஸ்ட்சர்ச் நகர் முழுவதும்  பதற்றமானதாக அறிவிக்கப்பட்டு கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூட போலீஸார் உத்தரவிட்டனர். குழந்தைகள், மாணவர்களை பள்ளி, கல்லூரியில் இருந்து வீடு திரும்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டனர்.

முதல் கட்டமாக 6 பேர் பலியானதாக  தகவல் வந்தது. தற்போது பலியானவர்கள் எண்ணிக்கை 49  ஆக உயர்ந்தது. 2-வது  துப்பாக்கி சூடு லின்வுட் புறநகர் பகுதி மசூதியில்  நடந்தது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த துப்பாக்கிசூட்டை அடுத்து  பாதுகாப்பு படையினர் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, போலீஸார் குவிக்கப்பட்டு, மசூதியில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்தனர்.

இதுகுறித்து கிறிஸ்ட் சர்ச் போலீஸ் ஆணையர் மைக் புஷ் கூறியதாவது:

” கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 ஆண்கள், ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். வேறு யாரும் ஈடுபட்டு இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரிந்தது.

இந்த தாக்குதலுக்குப் பின் மிகப்பெரிய அளவில் மற்றொரு தாக்குதல் நடத்த வாகனங்களில் வெடிபொருட்களையும் அவர்கள் நிரப்பி வைத்திருந்தனர்.

இந்த துப்பாக்கிக் சூட்டில் மொத்தம் 49 பேர் கொல்லப்பட்டனர், 20 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதல் நடத்தும்போது, ஹீக்ளி பார்க் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்தியவர் பேஸ்புக், இன்ட்ராகிராமில் நேரலை செய்து கொண்டே துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது.

அந்த வீடியோக் கண்டுபிடித்து நீக்கியுள்ளோம். வேறு யாரைனும் அந்த வீடியோ பகிர்ந்துள்ளார்களா எனவும் விசாரணை நடத்தி வருகிறோம். அந்த வீடியோ உண்மையில் மனதை உறையவைக்கும் விதமாக இருந்தது. அதை மக்கள் யாரைனும் பார்த்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

துப்பாக்கி ஏந்திய ஒருவர் மசூதிக்குள் நுழைந்தது முதல் துப்பாக்கி சூடு நடத்துவதும், தப்பி ஓடுபவர்கள் மீது சுட்டு வீழ்த்துவதுமாக அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த தாக்குதலுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை ஆனால், இனவெறி காரணமாக நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்.என்று தெரிவித்தார்.

இதற்கிடையே நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அட்ரென் கூறுகையில், ” கிறிஸ்ட்சர்ச்சில் இரு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. லிண்வுன்ட மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேரும், ஹக்லே பார்க் மசூதியில் 39 பேரும் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். இதை வலதுசாரி தீவிரவாத தாக்குதல் என்றுதான் அழைக்க வேண்டும். நீண்டகாலம் திட்டமிடப்பட்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்க வேண்டும். இது தொடர்பாக ஒரு பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்தவர் ” எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன் கூறுகையில், ” நியூஸிலாந்து துப்பாக்கிச்சூட்டுக்கு நாங்கள் மிகுந்த வேதனை தெரிவிக்கிறோம். இதில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர் ஒரு வலதுசாரி தீவிரவாதி. இந்த தாக்குதலுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் ” எனத் தெரிவித்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய குற்றவாளி  “ப்ரெண்டான் டாரன்ட்” என்று பெயரிடப்பட்ட ஒரு ஆஸ்திரேலியராக ட்விட்டரில் தன்னை அடையாளம் காட்டி உள்ளான்.  73 பக்கத்தில் தனது நோக்கங்களை அதில் அவன்  தெரிவித்து உள்ளான்.

உலகம் முழுவதும் வலதுசாரிகளின் ஆட்சி பரவலாக வியாபித்திருக்கிறது.வலதுசாரிகள் எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராகவும், தங்கள் கலாச்சாரமே உயர்ந்தது என்று மக்களிடம் பேசி,இனப்பெருமையையும் குரோதத்தையும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வளர்த்து விடுவார்கள்.பிறகு மூளைச்சலவை  செய்யப்பட்டு சிறு குழுக்களாக பிரிந்து தங்களது கருத்துக்கு எதிராக பேசுபவர்களையும்,மாற்று மதத்தினரையும் குண்டு வைத்து கொல்வதற்கு,தனி நபர்களை கொலை செய்வதற்கும் தயாராகி விடுவார்கள். வலதுசாரிகள் குறைந்தபட்ச சகிப்புத்தன்மையும் இல்லாதவர்கள். ஆகையால், மக்கள் இவர்களிடம் விழிப்போடும் இவர்களின் ஆட்சியை நீக்க தயாராகவும் உறுதிகொண்டு செயல்படவேண்டும்.    

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top