சீனாவின் ஆதிக்கம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் பிரச்சினைக்குரியது: கடற்படை தளபதி

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவுக்கு சவாலனதுதான் என்று இந்திய கடற்படை தளபதில் சுனில் லம்பா தெரிவித்துள்ளார்.

4  நாட்கள் அரசு முறைப் பயணமாக  பிரிட்டன் சென்றுள்ள கடற்படை தளபதி சுனில் லாம்பா, லண்டனில் நடைபெற்ற இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பங்களிப்பு குறித்த கருத்தரங்கில் உரையாற்றினார். அங்கு அவர் பேசியதாவது:- 

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கப்பல்கள் கட்டுவதில் சீனா அதிக அளவு செலவிட்டு வருகிறது. சீனாவை போல மற்ற எந்த நாடுகளும் கப்பல் கட்டுவதற்காக செலவிடுவதில்லை. இந்தியப் பெருங்கடலின் வடக்கு பகுதியில் எந்நேரமும் சீனாவின் 6-8 கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும் காணப்படுகின்றன. இது இந்தியாவுக்கு சவாலான பிரச்னைதான். எனினும் சீனாவின் நடவடிக்கைகளை இந்திய கடற்படை தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்றார். 

இதைதான், ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலையின் போது தமிழ் நாட்டில் தமழீழ மீட்பு போராட்டத்தில் முன்னணியில் இருக்கும் மே பதினேழு இயக்கம் தொடர்ச்சியாக சொல்லிவந்தது.

இந்தியப்பெருங்கடலுக்கு அரணாக இருந்த விடுதலை புலிகளுக்கு எதிராக இந்தியா களம் இறங்கியது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றார்கள்.அதுபோலவே இப்போது “இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.என்று லண்டனில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய கடற்படை தளபதில் சுனில் லம்பா உரையாற்றினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top