சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் சேஞ்ச் மேக்கர்ஸ் எனும் தலைப்பில் இன்று மாணவிகளுடன் கலந்துரையாடினார்.


சென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். மாணவிகளின் அரசியல், கல்வி உள்ளிட்ட பல்வேறு விதமான சரமாரியான கேள்விகளுக்கு ராகுல்காந்தி பதிலளித்தார். அவர் கூறியதாவது:- 

ஒரு மாணவி “ராகுல் சார்”என்று கேள்வியை ஆரம்பித்த உடன் ராகுல் அந்த மாணவியிடம் “சார் என்று அழைக்கவேண்டாம்,வெறும் ராகுல் என்று அழைத்தால் போதும்” என்றார்

  
கல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து மாபெரும் வல்லரசு நாடாக மாறும். பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென்னிந்தியா சிறந்து விளங்குகிறது. 

பெண்கள் இரண்டாம் நிலை அல்ல, அவர்களை சம நிலையாக கருத வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மத்திய அரசின் வேலை வாய்ப்பில், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும். ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும்.  குறைந்த வரி நிர்ணயம் செய்யப்படும். 

அனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் மக்களின் பணத்தை வங்கிகளில் பெற்றனர். அனில் அம்பானி ஒரு போதும் விமானம் தயாரித்தது இல்லை. அவரது நிறுவனத்துக்கு ரபேல் தயாரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக்கணக்கில் ரூ.35000 கோடி கடன் வாங்கிய நிரவ் மோடி இதுவரை எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளார்? இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இது குறித்த விசாரணை நடுநிலையாக நடத்தப்படவில்லை. மேலும், இந்தியாவில் கல்விக்காக குறைந்த அளவே நிதி அளிக்கப்படுகிறது. கல்விக்கான நிதி நிச்சயம் உயர்த்தப்பட வேண்டும்.  எனது தாயிடம் இருந்து மரியாதையை கற்றுக் கொண்டேன். மோடிக்கு ரபேல் பற்றி விளக்கம் அளிக்க ஒரு நிமிடம் போதும். ஆனால் பேச மறுக்கிறார். என்னிடம் கேள்விகள் கேட்கப்படுவதை போல், மோடியிடமும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.  

மத்திய அரசு வட மாநிலங்களின் வளர்ச்சியையே கவனிக்கிறது. ஒரு நாட்டின் பிரதமராக தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு மோடி தீர்வு காண வேண்டும். ஆனால் அவர் பாரபட்சம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு மாபெரும் தடையாக ஊழல் உள்ளது. இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும். 

இந்தியாவின் அரசியலில் தமிழகம்  மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது என எண்ணுகிறேன்.  இந்துக்கள் இஸ்லாமியர்களை குறை கூறுவதும், இஸ்லாமியர்கள் இந்துக்களை குறைகூறுவதும் என இந்தியா பிரிந்து இருக்கிறது. இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும் என விரும்புகிறேன். என்று கூறினார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top