எத்தியோப்பியா விமான விபத்து; அமெரிக்க போயிங் 737 விமானங்களை இயக்க பலநாடுகள் தடை!

157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து தங்களது வான்எல்லையில் அமெரிக்க தயாரிப்பான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா, பிரிட்டன் அரசுகள் தடை விதித்துள்ளன.

எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் ‘737 மேக்ஸ்-8’ ரக விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது. 

போயிங் -Boeing737MAX8 ரக விமானம் அமெரிக்காவின் நான்காம் தலைமுறை தயாரிப்பு.போயிங் 737 கமர்சியல் ஏர்ப்ளேன்ஸ், குறுகலாக வடிவமைக்கப்பட்ட ஒரு அமெரிக்க விமானத் தொடராகும்.இது 2010 ல் வடிவமைக்கப்பட்ட விமானத் தொடராகும், 2017ல் போயிங் -Boeing737MAX8 ரக விமானத்தை  பல நாடுகள் போட்டிப்போட்டு வாங்கும் நிலையில் இருந்தது.இப்போது எல்லா நாடுகளும் இதை தடைசெய்வதோடு நின்றுவிடாமல் தங்கள் வானில் பறக்கவும் தடைபோடுகிறார்கள்  

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா அரசு தடை விதித்துள்ளது.

இதேபோல் பிரிட்டன் அரசும் தங்கள் நாட்டுக்குட்பட்ட வான்எல்லைக்குள் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க இன்றுமுதல் தடை விதித்துள்ளது.

முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்து இருந்தது. இப்போது இந்த ஆர்டர்களை ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top