பெரு நாட்டின் பிரபல நடிகர் சால்வடார் டெல் சோலார் பிரதமராக பதவியேற்றார்

தென்னமெரிக்கா கண்டத்தில் பெரு நாட்டின் புதிய பிரதமராக பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார் பதவியேற்றார்.

தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள அழகிய நாடுகளில் ஒன்றான பெரு, அமேசான் மழைக்காடுகள் மற்றும் பசுமை நிறைந்த மச்சுபிச்சு மலைத்தொடர்களால் சுற்றுலாவாசிகளின் சொர்க்கப்புரியாக தோற்றமளிக்கிறது. பெரு நாட்டின் அதிபராக மார்ட்டின் விஸ்காரா பதவி வகித்து வருகிறார். 

கடந்த 2016-ம் ஆண்டில் பெரு நாட்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவை பெற்ற சீசர் வில்லனுயேவா பிரதமராக பதவியேற்றார். 

இவரது மந்திரிசபையில் கலாச்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்த சால்வடார் டெல் சோலார், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ஆல்பர்ட்டோ பியூஜிமோரி-க்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை 2017-ம் ஆண்டில் ராஜினாமா செய்தார். 

பெரு நாட்டின் பிரபல வழக்கறிஞரும், நடிகரும் திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலாரின் கோரிக்கைக்கு ஏற்ப முன்னாள் அதிபருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கு கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற மார்ட்டின் விஸ்காரா 23-3-2018 அன்று பதவியேற்றார். நாட்டில் அதிபர் மாற்றம் ஏற்பட்டதுடன் தனது பதவிக்காலத்தில் மனநிறைவு கொள்வதாக அறிவித்த பிரதமர் சீசர் வில்லனுயேவா கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.

இதைதொடர்ந்து, பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார்(48) புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top