பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் புள்ளிகளுக்கு தொடர்பு? -4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அரசியல் புள்ளிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டுள்ள திருநாவுக்கரசு உள்பட 4 பேர் மீதும் குண்டர் சட்டம் போடப்பட்டு இருக்கிறது .இந்த வழக்கில் தொடர்புடைய நாகராஜன் என்பவர் அதிமுக அம்மா பேரவையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகளிடம் பேஸ்புக்  மூலம் நண்பர்களாக பழகி காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து அவர்களிடம் பணம் பறித்துள்ளனர். இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவங்களை வீடியோவும் எடுத்து உள்ளனர். 

இதில் சபரிராஜன் (வயது 25), திருநாவுக்கரசு (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கோவையில் இந்த கும்பலிடம் சிக்கி பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல் நிலையம் சென்ற பின்னர்தான் இவ்விவகாரம் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த கொடூரக் கும்பல் 200-க்கும் அதிகமான பெண்களை காதல் என்ற வலையை வீசி கொடூரமான முறையில் நடத்தியதும், வீடியோ எடுத்ததும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது

இந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இத்தோடு இந்த வழக்கை மூடிவிடுவார்களோ என பொள்ளாச்சி மக்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட குற்றவாளியே நூறுக்கும் மேற்பட்ட வீடியோ எடுத்து இருப்பதாக தகவல் சொல்கிறான் ஆனால்,  காவல் கண்காணிப்பாளர் பேட்டியில் நான்கு வீடியோதான் என்கிறார் பத்திரிக்கையாளர் கேள்விமேல் கேள்வி கேட்டதும் சரியான பதில் இல்லை.

இந்நிலையில்,இதில் சம்பந்தப்பட்ட அரசியல் புள்ளிகளின் விவரம் வெளியே வந்ததும் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்காய் ஜி.ராமச்சந்திரன் “தமிழக அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான, அவதூறு செய்திகளை பரப்புகிறார்கள் என்று  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் கொடுத்து இருக்கிறார்.புகார் கொடுத்த உடனே இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்யும் காவல்துறை,அதிமுக கொடுத்த புகார் மீது துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்கிறது  

இதற்கிடையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் சார்பில் நேற்று புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டு இருக்கிறது.அதில்   

“பல்வேறு சமூக ஊடகங்களில், ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி வெளியானதுபோல் தயாரித்து பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிகழ்வில் கைது செய்யப்பட்டுள்ள முதல் குற்றவாளி திருநாவுக்கரசுக்கும், எனக்கும், என் மகனுக்கும் தொடர்பு உள்ளதுபோல, என்னுடைய அரசியல் பயணத்தை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் உண்மைக்கு மாறான செய்தியை திட்டமிட்டு பரப்பி இருக்கிறார்கள்.

ஒரு மிகப்பெரிய அநீதி நடந்து இருக்கிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முதன் முதலில் இந்த சம்பவத்தை வெளிக்கொண்டு வந்ததே நான் தான். ஆனால், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக பொய்யான செய்தியை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற செய்தியை பரப்பியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்”.என எதிர்க்கட்சி தலைவர் மீதே புகார் கொடுத்துவிட்டார்

.இந்த பாலியல் குற்றம் தொடர்பாக நடந்த ஒரு அடிதடி சம்பவத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். என்பது குறிப்பிடத்தக்கச் செய்தி


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top