தமிழக வாழ்வுரிமை கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி; வேல்முருகன்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் வடலூரில் நடைபெற்றது.

கட்சி தலைவர் வேல்முருகன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும் செல்போன் மூலமாக அவர் பேசியது, கூட்டத்தில் ஒலிபரப்பப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் என்னால் கூட்டத்திற்கு வர முடியவில்லை. விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன். பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்து போட்டியிடும். ஒரு சீட்டுக்காக யாரிடமும் விலை போக மாட்டேன். தொடர்ந்து தமிழர்களின் வாழ்வுக்காகவும், உரிமைக்காகவும் குரல் கொடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். பின்னர் கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top