அமெரிக்காவின் சதியால் மின் இணைப்பு துண்டிப்பு; இருளில் மூழ்கிய வெனிசூலா: 15 நோயாளிகள் பரிதாப சாவு

அமெரிக்காவின் சதியால் வெனிசூலாவில் மின் இணைப்பு துண்டிப்பால் சிகிச்சை பெற முடியாமல் 15 நோயாளிகள் பரிதாப உயிரிழந்தனர்.

எண்ணெய் வளம் மிக்க நாடான வெனிசூலா பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மற்றொரு புறம் அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிர்க்கட்சி கடுமையான நெருக்கடிகளை அமெரிக்காவின் துணையோடு

இந்த நிலையில், கடந்த 2 தினங்களுக்கு முன்பு வெனிசூலா முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு நாடே இருளில் மூழ்கியது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் சதி இருப்பதாக அதிபர் நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டுகிறார். 

மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள். குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் கடும் இன்னலை அனுபவித்து வருகிறார்கள். இந்த நிலையில், மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெறமுடியாமல் 2 நாட்களில் 15 நோயாளிகள் உயிர் இழந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.நாடு முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை பெற்று வருவதாகவும், மின் வினியோகத்தில் இதே நிலை நீடித்தால் அவர்கள் உயிர் இழப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் சுகாதார உரிமைகள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

வெனிசுலாவின் அதிபரை பழிவாங்கும் நோக்கில் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் அமெரிக்காவுடன் சேர்ந்துகொண்டு தன் சொந்த நாட்டு மக்களை பழிவாங்குகிறார் என்று சமூகவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top