லண்டனில் ஊர்வலத்தில் கைகலப்பு; இந்தியாவிற்கு கெட்டபெயர் வாங்கித்தந்த மோடி ஆதரவாளர்கள்!

இங்கிலாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் எதிரே காஷ்மீர் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய ஊர்வலத்தில்  இந்துத்துவ வாதிகள் புகுந்து  கைகலப்பு ஏற்படுத்தினர்

பிரிட்டனைச் சேர்ந்த காஷ்மீரி மற்றும் காலிஸ்தான் அமைப்பினர், தலைநகர் லண்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரகம் முன்பு சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இந்தியாவில் நடைபெற்றுவரும் பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து பேசினர்.

இதை கேள்விப்பட்ட லண்டனில் உள்ள இந்துத்துவ வாதிகள் திடீரென ஊர்வலதிற்குள் புகுந்து எதிராக கோஷங்கள் எழுப்பினர். ஜனநாயகத்திற்கு விரோதமாக ஒருவர் நடத்தும் கூட்டத்திற்குள் நுழைந்து மோடிக்கு ஆதரவாக கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அமைதியான முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், திடீரென இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த தகவலை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் தெரிவித்தனர். 

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டதாக லண்டன் மாநகர போலீஸார் தெரிவித்தனர்.

அமைதியாக நடந்த போராட்டத்தில் மோடி ஆதரவாளர்கள் நுழைந்து கைகலப்பை உருவாக்கியதால் வெளிநாட்டிலும் இந்தியாவிற்கு கெட்டபெயர் வாங்கி தந்த மோடி ஆதரவாளர்கள் மீது  லண்டன் வாழ் இந்தியர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்  


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top