பட்ஜெட்டில் உள்ள திட்டத்தை நிறைவேற்ற ரிசர்வு வங்கியின் லாபம் ரூ.28,000 கோடியை மத்திய அரசு எடுகிறது

ரிசர்வ் வங்கி தன் லாபத்தின் ஒரு பகுதியான ரூ.28,000 கோடியை மத்திய அரசுக்கு இடைக்கால டிவிடெண்ட் ஆக வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.

இது ,2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற ஏற்படுத்தப்பட்டிருக்கிறது  

இந்த புதுடெல்லியில் உள்ள ரிசர்வ் வங்கி [ஆர்பிஐ] மத்திய வாரியக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும்.  2வது ஆண்டாக தொடர்ச்சியாக ரிசர்வ் வங்கி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு இப்படி தொகையினை வழங்குகிறது துருக்கியில் அந்நாட்டு மத்திய வங்கி எர்டோகன் அரசுக்கு உதவியது போன்றதாகும் இது.நிதி மேலாண்மையில் மிக மோசமான விளைவை ஏற்படுத்தும்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டம் உள்ளிட்ட பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற மோடி அரசுக்கு இந்த இண்டெரிம் டிவிடெண்ட் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற தேர்தலில் பாஜக வெற்றிபெற பல உத்திகளை கையாளுகிறது அதில் ,10.5 பில்லியன் டாலர்கள் பெறுமான திட்டத்துக்கு மார்ச் 31ம் தேதி வாக்கில் முதல் தவணை விவசாயிகள் வங்கிக் கணக்கிற்குச் செலுத்துமாறு திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கு அரசுக்கு நிதி தேவைப்படுகிறது.ஆகையால் பாஜக அரசு ரிசர்வு வங்கியின் லாப பணத்தை எடுத்து தன் கட்சியின் சுய நல தேவைக்கு பயன்படுத்துகிறது

மத்திய அரசுக்கு தன் ரிசர்வ் தொகையிலிருந்து நிதியளிக்கும் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கும், ரிசர்வு வங்கிக்கும் [ஆர்பிஐ]-க்கும் இடையே இழுபறி போக்கு நிலவி வந்தது. இந்த இழுபறி விவகாரத்தில்தான் முன்னாள் ஆர்பிஐ கவர்னர் உர்ஜித் படேல் தன் பதவியைத் துறந்தார் என்பது நினைவு கொள்ளத்தக்கது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top