அதிமுக-பாஜக, பாமக கூட்டணி கொள்கையில்லாக் கூட்டணி; மு.தம்பிதுரை பேட்டி

தொடர்ந்து பாஜக வை விமர்சித்து வந்த மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை கரூரில் நேற்று செய்தியாளர்களிடம் தேர்தல் கூட்டணி என்பது கொள்கை ரீதியில் அமைக்கப்படுவதல்ல என்று பாஜக- பாமக உடனான கூட்டணியை விமர்சித்து கூறினார்,  அவர் கூறியதாவது:

மக்களவைத் தேர்தல் கூட்டணியில் அதிமுகவுடன் பாமக இணைந்துள்ளது. தேர்தல் கூட்டணி என்பது கொள்கை ரீதியில் அமைக்கப்படுவதல்ல. எதிரியை வீழ்த்த வேண்டும், மத்தியில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காகத்தான். இதனால் கூட்டணி வைத்துள்ள கட்சியின் கொள்கையை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக அர்த்தமல்ல.என்றார்.இப்போதும் மத்தியில் பாஜக தான் இருக்கிறது ஆனால் தம்பித்துரை கூறும்போது மத்தியில் நல்லாச்சி அமையவேண்டும் என்கிறார்.பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கூறவில்லை என்பது கவனிக்கத்தக்கது  

அவர்களின் கொள்கை வேறு, எங்களின் கொள்கை வேறு. இரு கட்சிகளும் ஒன்றையொன்று அந்தந்த காலகட்ட செயல்பாடுகளுக்கேற்ப விமர்சித்துள்ளன. ஜெயலலிதா இருந்தபோதே பாமகவுடன் 1998, 2009 மக்களவைத் தேர்தல், 2001 சட்டப்பேரவைத் தேர்தல் ஆகியவற்றில் கூட்டணி வைத்துள்ளோம்.என்றார்

அதிமுக வலிமையான கட்சி. அடுத்து மத்தியில் அமையும் ஆட்சியில் அதிமுக பங்கேற்பதற்கு வாய்ப்புள்ளது என்றார்.பாஜக வைப் பற்றி ஒரு வார்த்தையும் அவர் பேசவில்லை.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top