காஷ்மீர் தாக்குதல் தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா? முன் கூட்டியே எச்சரித்தும் உளவுத்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

பாஜக அரசின் ஆளுகைக்குள் இருக்கும் ஜம்மு – காஷ்மீரில் வியாழனன்று, இந்தியாவின் மத்திய ரிசர்வ் காவல் படையினர் குறைந்தபட்சம் 46 பேர் கொடூரமாக கொல்லப்பட்ட தாக்குதல் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று காஸ்மீர் உளவுத்துறை நம்புகிறது.

கடந்த 12ம் தேதி நாடு முழுதும் உள்ள உளவு அமைப்புகளுக்கு, பாதுகாப்பு படைகள் மீது  ‘ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு’ மிகப்பெரிய அளவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளதாகவும்.பாஜக அரசு அதை தடுக்க முயற்சி எடுக்கும் என்றும்  மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் பிபிசியிடம்செய்தி நிறுவனத்திடம்  தெரிவித்துள்ளார்.

இந்த எச்சரிக்கை குறித்து காவல்துறை தலைவர் தில்பாக் சிங், டெல்லியில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகரிடம் தெரிவித்ததாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதே போன்றதொரு தாக்குதலை ஆப்கானிஸ்தானில் சமீபத்தில் நடத்திய காணொளியை ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பு வெளியிட்டு, பாதுகாப்பு படையினரை பழி வாங்க இத்தகைய தாக்குதல் காஷ்மீரிலும் விரைவில் நடத்தப்படும் என்று கூறியிருந்ததே, காஸ்மீர் உளவுத்துறை விடுத்த எச்சரிக்கைக்கு காரணம்.

புது டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் முன்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்குமானால், பிப்ரவரி 14 அன்று நடந்த இந்த தாக்குதல் நிச்சயமாக பாதுகாப்பு குறைபாடுதான் என்பது தெளிவு என்று பெயர் வெளியிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னமே தெரிந்தும் பாஜக அரசின் மூத்த அதிகாரிகள் ஏன் இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லை,தேர்தல் பலனாக இந்த தாக்குதலை மாற்ற ஏதேனும் திட்டம் உள்ளதா?

1998இல் நடந்த கார்கில் போருக்கு பிறகு லஷ்கர்-ஈ-தய்பா மற்றும் ஜெய்ஷ்-ஈ-மொஹமத் ஆகிய அமைப்புகள் பல தற்கொலை தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தகைய தற்கொலை தாக்குதலில் ஈடுபடும் தீவிரவாதிகள் பாகிஸ்தான் நாட்டவர்களாவே இருக்கின்றனர்.

இப்போதுதான், புல்வாமாவைச் சேர்ந்த உள்ளூர்வாசியான வகாஸ் கமாண்டோ என்று அழைக்கப்படும் ஆதில் என்பவர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலின் கொடூரம் எந்த அளவுக்கு என்றால், தாக்கப்பட்ட பேருந்து இப்போது இரும்பு மற்றும் ரப்பர் துண்டுகளாக மட்டுமே உள்ளது.

இதில் 44 ரிசர்வ் போலீஸ் படையினர் இருந்தனர். ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு, எதிர்வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு காவல் பணியில் ஈடுபட வீரர்களை ஏற்றிக்கொண்டு அந்த வாகனங்கள் சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இறந்தவர்களில் பெரும்பாலானோர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

ஸ்ரீநகர் – லேத்ராபோ நெடுஞ்சாலையில் பல தாக்குதல்களை நடந்திருந்தாலும், இந்த அளவுக்குப் பெரிய தாக்குதல் பல ஆண்டுகளில் இதுவே முதல்முறை. தேர்தலுக்கு நாடு தயாராகி வரும் சூழலில் இந்த தாக்குதல் யாருக்கு பலன் உள்ளதாக மாறும்?

காஷ்மீரில் நடைபெற்று வரும் வன்முறை மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கு தான் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருவதாக பாகிஸ்தான் கருத்துத் தெரிவித்துள்ளது. “இந்த தாக்குதல் சம்பவம் குறித்து உரிய விசாரணைகள் நடப்பதற்கு முன்னதாகவே, இந்திய அரசாங்கமும், ஊடகங்களும் பாகிஸ்தானை குற்றஞ்சாட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அதன் அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் தாக்குதல் நிகழ்வுக்கு உளவுத்துறையின் தோல்வியும் ஒரு காரணம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் கூறியுள்ளார்.

காஸ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தற்போது ஆளுநர் ஆட்சியின் கீழ் உள்ளது.

தீவிரவாத ஊடுருவல்கள் சமீப காலங்களில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மோடியின் பாஜக  அரசு மார்தட்டிக்கொண்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல், காஷ்மீர் பிரச்சனை இன்னும் முடியவில்லை என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது.

இந்தத் தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அதிகரிக்கக்கூடும். பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ்-ஈ-மொஹமத் அமைப்பை ஆதரிப்பதாக இந்தியா ஏற்கனவே குற்றம்சாட்டியுள்ளது. பாகிஸ்தான் அதை மறுக்கிறது.

காஷ்மீர் போராட்டக் குழுக்கள் மற்றும் பாகிஸ்தான் அரசுடன் இந்தியாவின் இந்து தேசியவாத அரசு பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை என சிலர் விமர்சிக்கின்றனர்.

துருக்கி நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்திருந்த  பேட்டியில்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் “அமைதி முயற்சிகளை இந்தியா நிராகரிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார்” மேலும் , அண்டை நாட்டோடு வெறும் பகைமையை மட்டும் வளர்ப்பது நல்லதல்ல என்று பல பத்திரிகைகள் எழுதினாலும் மத்திய பாஜக அரசு பாகிஸ்தானை ஒரு எதிராளியின் நாடு என்றுதான் கருதுகிறது.இந்து மதம் இஸ்லாமிய மதம் என இரு எதிர் நிலைகளை முன் நிறுத்தி அரசியல் செய்யும் பாஜக எளிய மக்களை உணர்வு பூர்வமாக தன பக்கம் வைத்துக்கொள்ள ஒரு உத்தியாகவே இதை பயன்படுத்துகிறது.இது இந்தியாவின் வெளிஉறவு கொள்கையை பாதிக்கும்..

எனினும், இன்னும் சில மாதங்களில் தேர்தலை எதிர்கொள்ளும் நரேந்திர மோடி களத்தில் எதையும் செய்யாமல் இருப்பது அவருக்கு நல்லதல்ல.

காஷ்மீர் தாக்குதல் தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா? என்ற தலைப்பில் பத்திரிக்கையாளர் அருள் எழிலன் எழுதியிருப்பது தமிழகத்தில் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடம் ஒரு போர் நடகுமோ என்ற எண்ணம்  கடந்த பல மாதங்களாக  இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய  நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற  வாகனங்களுக்கு மத்தியில் வெட்குண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி திவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதில்  40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம் என்ற எண்ணம் இந்தியா முழுக்க பரவலாக மக்களிடமே உருவாகி இருந்தாலும், தேசிய ஊடகங்கள் எனப்படும் பாஜக ஊடகங்கள் போர் வெறியை உருவாக்கி வருகிறது.

#

 மோடி பதவியேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான பிரமாண்டமான இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் எப்படி சாத்தியம்?

#

இந்தியாவிலேயே அதி உச்ச பாதுகாப்பு வலயமைப்பு பகுதி காஷ்மீர். அதுவும் தேசிய    நெடுஞ்சாலை அதி உச்ச எச்சரிக்கை மற்றும் கண்காணிப்புகள் நிறைந்த பகுதி, இந்த பகுதிக்குள்  வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஒருவர் கொண்டு வந்து மோதுகிறார் என்றால் அது  இராணுவத்தினர் தரப்பில்  இருந்து  உதவி இல்லாமல் இப்படி ஒரு தாக்குதலை திவீரவாதிகளால் நடத்த முடியுமா?

#

ரோந்து செல்லும் போது அல்ல, ராணுவ அணிவகுப்பிற்குள் புகுந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது . இது நம்பும் படியாகவா இருக்கிறது.? அணிவகுப்பினுள் புகுந்து தாக்கும் அளவுக்கா இந்திய இராணுவம் இருக்கிறது?

#

சுமார் 300 கிலோ வெடிகுண்டுகளுடன் ஒருவர் தேசிய நெடுஞ்சாலைக்குள் நுழைந்து தாக்குகிறார் என்றால் நமது பாதுகாப்புத்துறை எப்படி மக்களை பாதுகாக்க முடியும்?

ராணுவ வீரர்கள் பல வாகனங்களில் வரும் போது மிகச்சரியாக உட்புகுந்து தாக்குதல் நடந்திருக்கிறது. அப்படி என்றால் அந்த வாகனம் அதுவரை காத்திருந்ததா?

#

காஷ்மீர் உளவுத்துறை இப்படி ஒரு தாக்குதலுக்கான திட்டம் இருப்பதாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்ததாகவும் , ஆனால், அந்த எச்சரிக்கையை மத்திய உள்துறையும் , உளவுத்துறையும் பொருட்படுத்தவில்லை என்றும்  செய்திகள் வெளியாகி உள்ளது.

#

வெடிகுண்டுகள் நிரம்பிய வாகனத்தை ஓட்டி வந்தவர் அடில் அகமது என்றும் அவர் புல்வாமா மாவட்டம் காம்க்கிபோரா பகுதியைச்ச் சேர்ந்தவர் என்றும்  தாக்குதல் நடந்த சில மணி  நேரங்கள் செய்திகள் வெளியானது எப்படி?

இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா என்ற அய்யம் மக்களிடம் எழுந்திருக்கிறது! என்று பத்திரிக்கையாளர் அருள் எழிலன் கூறுகிறார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top