‘ஏழு தமிழர்களை உடனே விடுதலை செய்’ பதாகை ஏந்தி நின்ற திருமணத் தம்பதிகள்;வாழ்த்தி வரவேற்ற மக்கள்!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த  திரு.இரா. மணிவண்ணன் BE-பா.வினோதினி B.Tech.,IT  இவர்களது  திருமணம் இன்று திண்டுக்கல்லில் நடைப்பெற்றது.  மணமக்கள் இருவரும் “ஏழு தமிழர்களை விடுதலை செய்” என்ற முழக்கம் கொண்ட பதாகையை பிடித்து நின்றார்கள்.பார்த்தவர்கள் வியந்து இருவரின் இந்த செயலை வாழ்த்தி வரவேற்றார்கள்.

திரு இரா .மணிவண்ணன் என்பவர் கட்டிட பொறியாளராக இருந்து வருகிறார். இவர் சமூகப்பணிகளில் ஆர்வம் உடையவர்.இயல்பாகவே சமூகப்பணிகளில் ஆர்வமுடையவர்கள் ஏதாவது கட்சியில் உறுப்பினராகி கட்சி பணியாற்ற சென்றுவிடுவார்கள், ஆனால், இவரோ உண்மையாக மக்களுக்காக பணியாற்றவேண்டும் என்று கட்சி சாராத இயக்க அரசியலை முன்னெடுக்கும் மே பதினேழு இயக்கத்தில் சேர்ந்து மக்களுக்காக பணியாற்றிவருகிறார்.

திரு.இரா. மணிவண்ணன் BE-பா.வினோதினி B.Tech.,IT  இவர்களின் திருமணம் திண்டுக்கல் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் இன்று நடைப்பெற்றது.இந்த திருமணத்திற்கு மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வந்து மணமக்களை வாழ்த்தினார்.

இவர்களின் திருமணம் தமிழக மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லவேண்டும் என்ற நல்ல நோக்கில் மணமக்கள் இருவரும் வாழ்த்த வந்திருந்த அனைவருக்கும் நிரபராதியான  “ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்றார்கள். அதோடு நில்லாமல் இருவரும் “ஏழு தமிழர்களை விடுதலை செய்” என்ற முழக்கம் கொண்ட பதாகையை பிடித்து நின்றார்கள்.அவர்களோடு வழ்த்த வந்தவர்களும் பதாகையை ஏந்தி நின்றார்கள்.

தமிழர்களின் கோரிக்கைகளை செவி மடுக்க மறுக்கும் மத்திய அரசுக்கு தமிழர்கள் ஆர்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாக வலியுறுத்திக்கொண்டிருந்த நிலையில் இன்று, திருமணங்கள் வாயிலாகவும் வலியுறுத்த வந்து விட்டார்கள்.எந்நிலையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் நினைவுறுத்தப்படும் என்பதை நிருபித்து விட்டார்கள் இந்த திருமணமக்கள். 

திருமணத்திற்கு வந்திருந்த எல்லோரும் திருமணத் தம்பதிகளின் இந்த கோரிக்கையை வாழ்த்தி வரவேற்றார்கள்.

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய சட்டசபையில் சம்பிரதாயமாக தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பி விட்டு, தமிழக அரசு தூங்கிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில்,அதன் அவசியம் உணர்ந்து  ஏழு தமிழர்களின் விடுதலை என்பது தமிழர்களின் உயிர் மூச்சான கோரிக்கை என்று தங்கள் திருமணம் வாயிலாக நிருபித்து இருக்கும் இரா மணிவண்ணன் -வினோதினி திருமணமக்களை வாழ்த்தி வரவேற்போம்.      


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top