சிவகாசியில் 2-வது நாளாக காத்திருப்பு போராட்டம்;பட்டாசு ஆலைகள் மூடல்; 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு

மத்தியில் ஆளும் பாஜக அரசால் எளிய, சாதாரண உழைக்கும் மக்களுக்கு எப்போதும் பிரச்சனை மேல் பிரச்சனைதான்.பாஜக அரசு பட்டாசு தொழிற்சாலைகளுக்கு பல கட்டுப்பாடுகள் போட்டதால், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 100 நாட்களாக பட்டாசு ஆலைகள் மூடிக் கிடக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று 2-வது நாளாக பட்டாசுத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 2015-ல் உச்ச நீதிமன்றத்தில் பட்டாசு வெடிக்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாடு முழுவதும் பட்டாசு தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், பட்டாசு தயாரிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. குறிப்பாக, பட்டாசு தயாரிக்க முக்கிய மூலப் பொருளான பேரியத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. அதோடு, சரவெடி தயாரிக்கவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் பசுமைப் பட்டாசு மட்டுமே தயாரிக்க உத்தரவிடப்பட்டது.

இதனால், கடந்த 100 நாட்களாக சிவகாசியில் பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இந்நிலையில், பட்டாசு ஆலைகளுக்கான நிபந்தனைகளை தளர்த்தவும், சுற்றுச்சூழல் விதியில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கவும், இதற்காக தமிழக அரசு சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தியும், வேலையிழந்த தொழிலாளர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் சிவகாசியில் நேற்று 2-வது நாளாக பட்டாசுத் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டத்தில், பட்டாசு ஆலை உரிமையாளர்கள், உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், விற்பனையாளர்கள், பட்டாசு வணிகர் சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சியினர், ஏராளமான பெண் தொழிலாளர்கள் உட்பட சுமார் 1,700 பேர் கலந்துகொண்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top